ஒரு ஊரே தங்கலாம் போல... 150 அறைகளுடன் ரூ.800 கோடியில் அரண்மனை போன்ற வீட்டை வாங்கியிருக்கும் பிரபல நடிகர்..!
150 அறைகளுடன் 10 ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள பிரபல நடிகரின் ரூ.800 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட அரண்மனை போன்ற வீட்டை பற்றி பார்க்கலாம்.
pataudi palace
ஹரியானா மாநிலத்தில் உள்ள கூர்கான் மாவட்டத்தில் தான் இந்த பட்டோடி பேலஸ் அமைந்துள்ளது. இந்த அரண்மனை போன வீட்டை நவாப் மன்னர் இஃப்திகார் அலி கான் தன்னுடைய மனைவிக்காக கட்டினார். மன்னர் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த வீடு, ஒரு கட்டத்தில் ஓட்டலாக மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி ஆடம்பர திருமணங்கள் நடத்துவதற்காக வாடகைக்கும் விடப்பட்டது. கடந்த 2005 முதல் 2014 வரை நீம்ரானா ஹோட்டலாக இது இருந்தது.
saif alikhan's pataudi palace
இந்த பிரம்மாண்ட வீட்டை எப்படியாவது வாங்க வேண்டும் என ஆசைப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான், இதற்காக சினிமாவில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்க தொடங்கினார். அதன்பின்னர் ரூ.800 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை தான் ஆசைப்பட்டபடியே வாங்கினார் சையிப். இந்த வீடு நவாபி மன்னர் காலத்து கட்டிடக் கலையுடன் கட்டப்பட்டு இருப்பதோடு, இன்றளவும் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
pataudi palace worth
இந்த வீடு மொத்தம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் 7 டிரெஸ்ஸிங் ரூம், 7 பெட் ரூம், 7 பில்லியர்ட் ரூம் உள்பட மொத்தம் 150 அறைகள் உள்ளன. இதுதவிர பிரம்மாண்ட டைனிங் ரூமும் இங்கு உள்ளது. இந்த வீட்டில் பழங்காலத்து ஓவியங்கள், புகைப்படங்கள், மர சாமான்கள், கண்ணாடி பொருட்கள் என பல்வேறு விதமான பொருட்கள் நிரம்பி உள்ளன. இந்த வீட்டின் தரை பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தில் செஸ் போர்டு போன்று கட்டப்பட்டு இருக்கின்றன.
saif ali khan
சையிப் அலிகானுக்கு சொந்தமான இந்த வீட்டில் சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்படுகின்றன. அண்மையில் திரைக்கு வந்த ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படமும் இந்த வீட்டில் தான் படமாக்கப்பட்டது. இந்த வீட்டில் பிரம்மாண்ட நீச்சல் குளமும் அமைந்திருக்கிறது. பிரம்மாண்டத்திற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ.800 கோடியாம். தற்போது பாலிவுட் பிரபலங்களின் பேவரைட் ஸ்பாட் ஆக இந்த பட்டோடி பேலஸ் மாறி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... இதுக்கு மேல காத்திருக்க முடியாது... கமலுக்கு டாட்டா காட்டிவிட்டு வாரிசு நடிகர் பக்கம் சென்ற ஹெச்.வினோத்