முதன்முறையாக தன்னுடைய கேர்ள் பிரெண்டை அறிமுகம் செய்துவைத்த பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி, தன்னுடைய கேர்ள் பிரெண்டை அறிமுகப்படுத்தி உள்ளார்.
Pradeep Antony
அருவி, யாழ், டாடா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி. சினிமாவில் இவருக்கு கிடைக்காத பெயரையும், புகழையும், ஒரே மாதத்தில் சம்பாதித்து கொடுத்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் பிரதீப். இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டில் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப், ரெட் கார்டு கொடுத்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
Bigg boss Pradeep
பிரதீப்பால் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன், சரவண விக்ரம், ரவீனா, மணி ஆகியோர் குற்றச்சாட்டு முன்வைத்ததை அடுத்து, அவர்மீது அதிரடி ஆக்ஷன் எடுக்க முடிவெடுத்த கமல் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றினார். இதில் பிரதீப் தரப்பு நியாயத்தை கமல் கேட்காமலேயே அவரை வெளியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு விவாத பொருளாகவும் மாறியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Pradeep, kamal
பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது நியாயமற்றது என கூறி பல்வேறு பிரபலங்களும் குரல் கொடுத்தனர். ஆனால் கமல் தன்னுடைய முடிவில் மாற்றமில்லை எனக்கூறி கடந்த வாரம் திட்டவட்டமாக கூறினார். இதனால் பிரதீப் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கம்பேக் கொடுக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியானது. தனது கேம் ஓவரானாலும் தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Pradeep Girl friend, Suresh Chakravarthi
இந்த நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தி, தன்னுடைய யூடியூப் சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து தினசரி வீடியோ போட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் ரிவ்யூ செய்தபோது பிரதீப் ஆண்டனி தன்னுடைய கேர்ள் பிரெண்ட் உடன் வந்து கலந்துகொண்டுள்ளார். அப்போது இவர் தான் பிரதீப்பின் கேர்ள் பிரெண்ட் என சுரேஷ் சக்ரவர்த்தி ஒரு பென்னை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த பெண்ணின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... நீங்க இல்லாம நான் இல்ல... நடிகையாக ஒரு தசாப்தத்தை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட எமோஷனல் வீடியோ