Asianet News TamilAsianet News Tamil

என் பொண்ணோட மிகப்பெரிய ஆசைங்க; உயிரிழந்த மகளுக்கு விழா நடத்திய பெற்றோர் - உறவினர்கள் நெகிழ்ச்சி

திருப்புவனத்தில் இறந்த மகளின் ஆசையை நிறைவேற்ற அன்னையர் தினத்தில் மகளின் கட்அவுட்டிற்கு பூப்புனித நீராட்டு விழா நடத்திய தாயை உறவினர்கள், பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். 

a family members held flower purifying bathing ceremony for dead daughter in thanjavur vel
Author
First Published May 14, 2024, 1:12 PM IST

உலகில் தாய்ப்பாசத்தை மிஞ்சியது எதுவுமே இல்லை. அதிலும் பெண் குழந்தைகள் என்றாலே தாய்க்கு மிகவும் பிரியமானவராகத்தான் இருப்பார். பெண் குழந்தை பிறந்து திருமணம் முடிந்து சென்றால் கூட தாய்க்கு அவர் குழந்தை தான். திருப்புவனத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாலகிருஷ்ணன் & ராக்கு தம்பதியினருக்கு பாண்டிச்செல்வி என்ற ஒரே ஒரு பெண்குழந்தை இருந்துள்ளது. சிறு வயதில் இருந்தே பாண்டிச்செல்விக்கு அலங்காரம் என்றாலே மிகவும் பிரியம் என கூறப்படுகிறது. 

பள்ளி சென்று வந்த பின் சேலை கட்டி, பூ வைத்து வலம் வருவதில் அலாதி இன்பம். உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அங்கும் மிகுந்த அலங்காரத்துடன் வலம் வந்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்லும் போது தாய் ராக்குவிடம் தான் பூப்பெய்தும் போது இது போன்று பிரமாண்டமாக விழா நடத்த வேண்டும் என கேட்டுள்ளார். ஒரே பெண் என்பதால் அவர் சொல்வதற்கு எல்லாம் சம்மதம் தெரிவித்துள்ளார். பிறந்த நாள் உள்ளிட்ட தினங்களில் விசேஷங்களை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர். 

இளம் தாய்மார்கள், கருவுற்ற பெண்களுக்கான நிதி உதவியை இழுத்தடிப்பதா? ராமதாஸ் ஆவேசம்

இதனிடையே கடந்த 3 வருடங்களுக்கு முன் 8ம் வகுப்பு படிக்கும் போது திடீரென உடல்நலக்குறைவால் பாண்டிச்செல்வி உயிரிழந்துள்ளார். ஒரே மகள் மரணமடைந்ததை ஜீரணிக்க முடியாமல் இருந்த ராக்கு தனது மகள் தன்னுடனேயே வாழ்ந்து வருவதாக எண்ணி வலம் வருகிறார். தற்போது அவரது மகளுக்கு 14 வயது ஆகும் என்றும், உயிருடன் இருந்தால் பூப்பெய்து இருப்பார் என எண்ணி அவருக்கு பூப்புனித (சடங்கு) நீராட்டு விழா அன்னையர் தினத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார். 

உறவினர்கள் அனைவரையும் அழைத்து அன்னையர் தினத்தில் கொண்டாட எண்ணிய போது திருமண மகால் கிடைக்காததால் நேற்று மகளின் பூப்புனித நீராட்டு விழாவை வெகு விமரிசையாக நடத்தினார். உறவினர்கள் அனைவரையும் பத்திரிகை வைத்து அழைத்து தனியார் கல்யாண மண்டபத்தில் மகளை போன்றே கட்அவுட் செய்து அதற்கு பட்டுச்சேலை, நகை, மாலை அணிவித்து விழாவை நடத்தினார். மகளின் காலடியில் அவர் பயன்படுத்திய கொலுசு உள்ளிட்டவைகளும் உறவினர்கள் கொண்டு வந்த பட்டுச்சேலை, நகை சீர் வரிசை உள்ளிட்டவைகளும் பரப்பி வைக்கப்பட்டன. 

காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குமரியில் ஆன்மீக சுற்றுலா

விசேசங்களின் போது சம்பந்தப்பட்டவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்று மகளின் அலங்கரிக்கப்பட்ட கட்அவுட் உடன் சேர்ந்து உறவினர்கள், ராக்கு, அவரது கணவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் போட்டோ எடுத்து கொண்டனர். ராக்குவிற்கும் அவரது மகள் பாண்டிச்செல்விக்கும் “என் பொம்முகுட்டி அம்மாவிற்கு“ என்ற திரைப்படத்தில் நடிகை சுஹாசினி மகளை பறிகொடுத்த பின் பாடும் “கண்ணே நவமணியே உன்னை காணாது நெஞ்சு” என்ற பாடல் ரொம்ப பிடிக்குமாம், அடிக்கடி தாயும் மகளும் அந்த பாடலை பாடுவது வழக்கம், தினசரி இரவிலும் அந்த பாடலை பாடிய பின்தான் பாண்டிச்செல்வி தூங்குவாராம், துரதிஷ்டவசமாக அந்த பாடல் அவரது வாழ்க்கையில் உண்மையாகி போனதுதான் சோகம், பூப்புனித விழாவில் தாயார் ராக்கு அந்த பாடலை பாடியது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios