பயம் காட்டிய பிக்பாஸ்... டிஆர்பியை தக்க வைக்க எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் அதிரடியாக மாற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும், அந்த நேரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.
ethirneechal
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டிஆர்பி கிங் ஆக திகழ்ந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சமயத்தில் மற்ற தொடர்களின் நேரங்கள் மாற்றம் செய்யப்படும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கிழக்கு வாசல், ஈரமான ரோஜாவே 2 ஆகிய தொடர்களின் நேரம் மாற்றப்பட்டது. ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பயந்து சன் டிவி சீரியல் நேரம் மாற்றப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
ethirneechal serial
சன் டிவி சீரியல்களில் கடந்த சில மாதங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்து வந்த சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். டிஆர்பியில் இந்த சீரியல் சக்கைப்போடு போட்டு வந்ததற்கு காரணம் அதில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து தான். அவர் கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததால் அது எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அவரது கேரக்டருக்கு ஆள் கிடைக்காமல் சில நாட்கள் திண்டாடிய எதிர்நீச்சல் டீம், ஒருவழியாக வேல ராமமூர்த்திய கமிட் செய்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ethirneechal serial timing
மாரிமுத்து இல்லாததால் எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பியும் பாதித்துள்ளது. இதனால் கதைக்களத்தை மாற்றி டிஆர்பியை மீட்டெடுக்கும் முயற்சியில் எதிர்நீச்சல் டீம் களமிறங்கி உள்ளது. இந்த சமயத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு தொடங்கப்பட்டுவிட்டதால், அது எதிர்நீச்சல் சீரியலுக்கு பின்னடைவாக அமைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் இரவு 9.30 மணிக்கு தான் எதிர்நீச்சல் சீரியலும் ஒளிபரப்பாகி வந்தது.
ethirneechal serial timing changed
இந்நிலையில், தற்போது அதிரடியாக எதிர்நீச்சல் சீரியலில் நேரத்தை மாற்றி இருக்கின்றனர். அதன்படி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அந்த சீரியல் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ஆலியா மானசா நடித்த இனியா சீரியல், இனி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நேரத்தை மாற்றினாலும் பழைய படி டிஆர்பியை தக்க வைக்குமா எதிர்நீச்சல் சீரியல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன... கூல் சுரேஷை பழிக்குப்பழி வாங்க தான் வாய்ப்பளித்தாரா பிக்பாஸ்? ஷாக்கிங் வீடியோ இதோ