MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிக் பாஸ் வீடு.. மொத்தம் 76 நாள்.. நேக்கா எஸ்கேப் ஆக நினைத்த கூல் சுரேஷ் - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் வீடு.. மொத்தம் 76 நாள்.. நேக்கா எஸ்கேப் ஆக நினைத்த கூல் சுரேஷ் - வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bigg Boss Cool Suresh Salary : பிக் பாஸ் வீட்டில் 76 நாட்கள் இருந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் கூல் சுரேஷ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு ஏற்பதற்குப் பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 Min read
Ansgar R
Published : Dec 17 2023, 10:11 AM IST| Updated : Dec 17 2023, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Cool Suresh With Simbu

Cool Suresh With Simbu

புவனேஸ்வரில் பிறந்து தற்பொழுது தமிழ் திரையுலகில் நடிகராக வளம்வந்து கொண்டிருப்பவர் தான் கூல் சுரேஷ். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நடிகர் பிரசாந்த் அவர்களின் "சாக்லேட்" என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக களமிறங்கினார். அதன் பிறகு தொடர்ச்சியாக நடிகர் சிம்புவின் காதல் அழிவதில்லை மற்றும் அலை போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார். 

கதை சொன்ன லோக்கி.. பாராட்டி கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்.. தலைவர் 171 - சுவாரசிய அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

23
Bigg Boss house

Bigg Boss house

கூல் சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை, முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, திரையரங்க வாசலிலேயே இவர் கூறும் வித்தியாசமான ரிவ்யூ மக்கள் மத்தியில் பிரபலமடைய துவங்கியது. 

இதன் காரணமாகத்தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் தேர்வானார் என்று சொன்னாலும் அது மிகையல்ல. முதலில் வலுவான போட்டியாளராகவே திகழ்ந்து வந்த கூல் சுரேஷ், ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பிக்கும் எண்ணத்தில், சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்து பின்னர் ஹவுஸ் மேட்ச்சால் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

33
Cool Suresh

Cool Suresh

இந்த சூழ்நிலையில் அவர் சுமார் 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது வெளியேறியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாரத்திற்கு 1.5 லட்சம் வீதம் சுமார் 15 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved