அனன்யா சேஃப் ... பிக்பாஸ் எலிமினேஷனில் ஏற்பட்ட மிகப்பெரிய ட்விஸ்ட்! இந்த வாரம் வெளியேறியது இந்த பிரபலமா?
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம், வெளியேறிய பிரபலம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Bigg boss Season 7 Tamil:
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, இதுவரை இல்லாத புத்தம் புதிய கான்செப்டில், இரண்டு வீடுகள், 120 கேமராக்கள், என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. 40 நாட்களுக்கு பின்பு நடக்க கூடிய பிரச்சனைகளை நான்கே நாட்களில் நடத்தி வீட்டை அதகள படுத்தினர் போட்டியாளர்கள். அதே போல் அனைவருமே, கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக, போட்டி போட்டு கொண்டு சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கினார்கள்.
Biggboss Contestant Fight:
வீட்டிற்குள் வந்த மொத்தம் 18 போட்டியாளர்களும், பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்ற நிலையில்... அப்போ இரண்டாவது வீட்டில் யார் தங்குவார்கள் என கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு இரண்டாவது நாளே பதில் கொடுத்தார் பிக்பாஸ், அதாவது முதல் வார கேப்டனான விஜய்யை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை ஸ்மால் ஹவுஸுக்கு அனுப்பி வைத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Yugendran and Vichitra go to Small boss house:
யுகேந்திரன் மற்றும் விசித்ரா இருவரும் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களுக்கு உதவியதால், அவர்களுடன் ஸ்மால் ஹவுஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் இடையே நடந்த டாஸ்கில் ஸ்மால் ஹவுஸ் வீட்டை சேர்ந்தவர்கள் வெற்றிபெறாத காரணத்தால், பாத்ரூம், மற்றும் டாய்லெட் கிளீனிங் வேலைகளும் ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்டுக்கு வந்து சேர்ந்தது.
This week eviction:
முதல் வாரமே மிகவும் சுவாரஸ்யமாக சென்றால் கூட, இந்த வார எலிமினேஷன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதன்படி, இந்த வாரம், எவிக்ஷன் பட்டியலில் யுகேந்திரன், பிரதீப், ரவீனா, ஐஷூ, அனன்யா, பவா செல்லதுரை மற்றும் ஜோவிகா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
Yugendran is evicted
இவர்களில், அனன்யா ராவ் தான் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றுள்ளதால்அவர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அனன்யா சேஃப் ஆகி உள்ளதாகவும், யாரும் எதிர்பாராத விதமாக, முதல் வாரத்தில் மிகவும் குறைவான வாக்குகளுடன் யுகேந்திரன் வாசுதேவன் தான் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவரின் மனைவி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூட, இரண்டாவது வாரத்தில் அவர் வெளியே வந்து விடுவார் என கூறி இருந்தார். ஆனால் முதல் வாரத்திலேயே வந்து விடுவார் என்பதை அவர் எதிர்பார்க்க மாட்டார்.