CWC Manimegalai: விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி மணிமேகலை! பரிதாமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரல்!
குக் வித் கோமாளி பிரபலமும், தொகுப்பாளினியுமான மணிமேகலை காலில் மிகப்பெரிய கட்டுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Manimegalai
சன் மியூசிக்கில், பல இளம் ரசிகர்கள் நெஞ்சங்களை கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வந்தவர் மணிமேகலை. ஆனால் இவரின் பேச்சு திறமை மற்றும் காமெடி சென்ஸுக்கு தீனி போட்ட நிகழ்ச்சி என்றால் அது, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
Manimegalai Marriage with Hussain:
பெற்றோரை மீறி, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஹுசைன் என்பவரை மணிமேகலை திருமணம் செய்து கொண்டதால், ஃபினான்சியல் ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது தான் விஜய் டிவி-யில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தங்களின் நடன திறமையை வெளிப்படுத்தி இரண்டாவது பரிசை தட்டி சென்றது இந்த ஜோடி.
Cook with Comali Anchor:
பின்னர் மெல்ல மெல்ல, விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து, இவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக மாறினார். ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளியாக இருந்த மணிமேகலையின் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதை தாண்டி, யூ டியூப் மூலமாகவும் சம்பாதித்து வருகிறார் மணிமேகலை.
Manimegalai anchoring Cine and Award Functions:
சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி, தனியார் யூடியூப் சேனலில் பிரபலங்களை ஜோடியாக பேட்டி எடுத்து வருகிறார்கள். அது மட்டும் இன்றி மணிமேகலை பல்வேறு திரைப்படங்களின் ஆடியோ லான்ச், விருது விழா போன்றவற்றிலும் ஆங்கரிங் செய்து வருகிறார்.
Manimegalai Met Accident:
எப்போதும் சமூக வலைத்தளத்தில், மன மகிழ்ச்சியுடன் போஸ்ட் போடும் இவர், தற்போது மனசோர்வோடு போட்டுள்ள பதிவு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், மணிமேகலையின் காலில் மிகப்பெரிய கட்டு ஒன்றும் உள்ளது. "எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தன்னுடைய காலில் பலத்த அடி பட்டுவிட்டதாகவும், தன்னால் எழ கூட முடியவில்லை என்றும், மனசோர்வுடன் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மணிமேகலை மிகவும் பரிதாபமாக அமர்ந்துள்ளார். ரசிகர்களும் விரைவில் இந்த காயம் சரியாக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D