Rajinikanth: போய் ஆஸ்கரை கொண்டு வா! '2018' பட இயக்குனர் ஜூட் ஆண்டனியை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
ஆஸ்கர் விருது போட்டிக்கு, நாமினேட் செய்யப்பட்டுள்ள '2018' படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ஓம் ஷாந்தி ஒஷானா' என்கிற படத்தின் மூலம்இயக்குனராக அறிமுகமானவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இந்த படத்தை தொடர்ந்து நடிகராகவும் பிஸியானதால், எண்ணி நாளே படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ளார்.
இந்த இந்த ஆண்டு, வெளியான '2018' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இப்படம் கேரளாவில் கடந்த '2018' ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையை கண் முன் நிறுத்தியது.
மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, ஒருவருக்கொருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியது. பகை, கோவம், ஏற்ற, தாழ்வுகள் மறந்து மநத்தமே சிறந்தது என பலர் நிரூபித்தனர். மிகவும் எமோஷ்னல் டச்சுடன் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில், இப்படத்தில் டோவினோ தாமஸ் ,தன்வி ராம், லால், நரேன், ஆசிப் அலி, கலையரசன், அபர்ணா பாலமுரளி, அஜய் வர்கீஸ், உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்த படம், பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில், 2023-ம் ஆண்டுக்கான அகாடமி (ஆஸ்கார்) விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் கிரிஷ் காசரவல்லி தலைமையிலான குழு 2023-ம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் மொத்தம் 22 படங்களை பார்த்து பரிசீலலை செய்ததில், '2018' படத்தை ஒருமனதாக தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள இவர், "தலைவர் “என்ன படம் ஜூட், எப்படி எடுத்தீர்கள்? அற்புதம்”.பின்னர் ஆஸ்கர் குறித்து பேசிய அவர் . "போய் ஆஸ்கார் கொண்டு வா, என் ஆசிகள் மற்றும் பிரார்த்தனைகள்" எப்போதும் இருக்கும் என்கிறார். இந்த மறக்க முடியாத அனுபவத்திற்கு கடவுளுக்கு நன்றி என்றும். என் அன்புத் தோழி சௌந்தர்யா, அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
தற்போது ரஜினிகாந்த் தன்னுடைய '170' படத்தின் படப்பிடிப்புக்காக, திருவனந்தபுரத்தில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தை, 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.