MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அதகளமாக ஆரம்பமாகும் 2024 - அயலான், தங்கலான் என தரமான படங்களுடன் அலப்பறை கிளப்ப ரெடியாகும் தமிழ் சினிமா

அதகளமாக ஆரம்பமாகும் 2024 - அயலான், தங்கலான் என தரமான படங்களுடன் அலப்பறை கிளப்ப ரெடியாகும் தமிழ் சினிமா

அயலான் முதல் தங்கலான் வரை 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் சினிமாவின் தரமான படங்கள் பற்றிய தொகுப்பு இதோ.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 29 2023, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Tamil Movies releasing on 2024

Tamil Movies releasing on 2024

விஜயகாந்த் மறைவால் தமிழ் சினிமாவிற்கு 2023-ம் ஆண்டு சோகத்தோடு முடிவடைந்தாலும், இந்த ஆண்டு பல மறக்க முடியாத திரைப்படங்களும் பல திறமையாளர்களும் கோலிவுட்டுக்கு கிடைத்துள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. பிசினஸை பொறுத்தவரை 2023 கோலிவுட்டுக்கு ஒரு பொன்னான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டும் இதே நிலை தொடரும் வகையில் அடுத்த ஆண்டு முதல் பாதியில் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

26

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் பண்டிகை என்றாலே பெரிய நடிகர்களின் படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு நான்கு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ், தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் கனவு திரைப்படமான அயலான், அருண் விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டி இருக்கும் மிஷன் பாகம் 1 ஆகிய திரைப்படம் 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

36

குடியரசு தின வெளியீடு

பொங்கலை தொடர்ந்து குடியரசு தினத்திற்கும் புதுப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி இரண்டு தமிழ் படங்கள் நேருக்கு நேர் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒன்று ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம். மற்றொரு திரைப்படம் சுந்தர் சி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

46

மார்ச்சில் தங்கலான்

சீயான் விக்ரம் - பா.இரஞ்சித் கூட்டணியில் தரமான திரைப்படமாக உருவாகி உள்ளது தங்கலான். இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் பணிகள் முடிவடையாததால் மார்ச் மாதத்திற்கு தங்கலான் தள்ளிப்போய் உள்ளது. அதேபோல் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம், பாலா இயக்கிய வணங்கான் ஆகிய படங்களும் மார்ச்சில் ரிலீஸாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

56
Kanguva

Kanguva

ஏப்ரலில் கங்குவா

ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை வருவதால் அம்மாதம் பெரிய படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆவது வழக்கம் அந்த வகையில் சூர்யா நடித்த கங்குவா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன், கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்கள் ஏப்ரல் ரிலீஸை நோக்கி காத்திருப்பதாக தெரிகிறது.

66

மே மாதம் தல - தளபதி மோதல்

நடிகர் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் அன்றைய தினம் திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தளபதி 68 திரைப்படம் மே மாதம் ரிலீசாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மறுபுறம் அஜித்தின் விடாமுயற்சி படமும் அவரின் பிறந்தநாளான மே 1-ந் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... படிக்க காசு இல்லாமல் கலங்கி நின்ற தனுஷின் சகோதரி கார்த்திகா.! ஓடி வந்து உதவிய விஜயகாந்த்.. உருக்கமான பதிவு!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved