T20 World Cup 2024: 5.4 ஓவர்களில் வெற்றி – நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு சென்ற ஆஸ்திரேலியா!
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Australia vs Namibia, T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பை தொடரின் 24ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகள் மோதின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நமீபியா முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் கெரால்டு எராஸ்மஸ் மட்டும் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். மைக்கேல் வான் லிங்கம் 10 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
Australia vs Namibia, T20 World Cup 2024
மற்ற வீரர்கள் 1, 3, 7, 2, 0 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நமீபியா 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியா அணியில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜோஸ் ஹசல்வுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் எல்லீஸ் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Australia vs Namibia, T20 World Cup 2024
பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடவே 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 74 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
Australia vs Namibia, T20 World Cup 2024
இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆடம் ஜம்பா ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலமாக ஐசிசி தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற கிளென் மெக்ராத்தை (6), ஓவர்டேக் செய்து ஆடம் ஜம்பா சாதனை படைத்துள்ளார்.
Australia vs Namibia, T20 World Cup 2024
இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த நமீபியா விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.
Australia vs Namibia, T20 World Cup 2024
இதே போன்று குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஓமன் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து முதல் அணியாக சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்காவும் 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.