- Home
- Gallery
- Rasi Palan : பொய் சொல்வதில் இந்த 3 ராசிக்கு கைவந்த கலை..இவங்கள அடிச்சிக்க யாருமே இல்ல.. யார் யார் தெரியுமா..?
Rasi Palan : பொய் சொல்வதில் இந்த 3 ராசிக்கு கைவந்த கலை..இவங்கள அடிச்சிக்க யாருமே இல்ல.. யார் யார் தெரியுமா..?
ஜோதிட சாஸ்திரப்படி, பொய் சொல்லும் குணம் கொண்ட மூன்று ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பலர் பொய்யை எப்போதுவதுதான் சொல்லி இருப்போம். ஆனால், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் பொய் சொல்வதற்காகவே வாழ்கிறார்கள். ஜோதிடம் ஒருவர் பிறந்த உடனேயே அவரது வாழ்நாளை முழுவதுமாக கணித்துவிடும். எனவே ஜோதிடத்தின் படி, பொய்க்கான 3 ராசிகள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
மிதுனம்: ஜோதிடத்தின் படி மிதுன ராசிக்காரர்கள் பொய் சொல்வதில் பல்லவர்கள். இவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு ஆளுமையில் இருந்து, இன்னொரு ஆளுமைக்கு சிரமமின்றி தங்களை மாற்றிக் கொள்வார்கள். இவர்கள் சொல்லும் பொய் உண்மை என்று நம்பும் அளவிற்கு பொய் சொல்வார்கள். எனவே, இந்த ராசிக்காரர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்.
இதையும் படிங்க: Rasi Palan : நீங்கள் கல்யாணம் பண்ணா இந்த 3 ராசிக்காரங்கள மட்டும் பண்ணாதீங்க.. விவாகரத்து கன்பார்ம்..!
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் வசீகரமான முகம் மற்றும் மகிழ்ச்சிக்கான வார்த்தைகளால் உங்களை வலையில் இழுப்பார்கள். இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு இவர்கள் பொய் சொல்லுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் பொய் செய்ய சொல்ல தயாராக இருப்பார்கள். எனவே இவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இதையும் படிங்க: Rasi Palan : இந்த 5 ராசிக்கு தான் செக்ஸ் கனவுகள் அதிகம் வருமாம்..!
மீனம்: ராசிகளில் மீன ராசி கடைசியாக இருந்தாலும் பொய் சொல்வதில் தவறியதில்லை. பல சமயங்களில் மீன ராசிக்காரர்கள் அப்பாவியாக நடிக்கலாம். ஆனால், அவர்கள் அப்பாவி அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு எந்த சூழ்நிலையில் எந்த மாதிரியான பொய்களை சொல்ல வேண்டும் என்று முன்கூட்டியே தெரியும். முக்கியமாக, இந்த ராசியுடன் பழகும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இல்லையெனில், நீங்கள் செய்யாத தவறுக்கு இவர்களால் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D