கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் 16ஆக உயர்வு! மருத்துவமனையில் 10 பேர் கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 10 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

District Collector's explanation regarding the death of those who drank illicit liquor-rag

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் புதன்கிழமை சிலர் கும்பலாகச் சென்று கள்ளச்சாராயம் அருந்தினார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் அருந்திது மெத்தனால் கலந்து விஷச்சாராயமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், அதனைக் குடித்தவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள்.

சுரேஷ், பிரவின், சேகர், சுரேஷ், மணிகண்டன், மணி, தனக்கோடி, ஆறுமுகம், இந்திரா, கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, ராமு, டேவிட், கந்தன், வடிவு , சுப்ரமணி ஆகிய 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் 10 பேரில் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

"இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்" எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

கலெக்டர் ஷ்ரவண்குமார் சஸ்பெண்ட்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  மேலும் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாள சமய்சிங் மீனாவையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அனைவரையும் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு காவல்துணை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கை தீர விசாரிப்பதற்காக சிபிசிஐடி வசம் ஒப்படைப்பதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு. ஷ்ரவன்குமார் ஜடாவத், இ.ஆ.ப., உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக திரு.எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள், புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு சமய் சிங் மீனா, இ.கா.ப அவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர், திருமதி கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ரூ.500 கோடியில் பாகுபலியை மிஞ்சும் பிரமாண்டம்.. ஸ்பா! 12 படுக்கையறை! ஆந்திராவை அலறவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios