- Home
- Gallery
- Vidaa Muyarchi : அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் எப்போது? சுரேஷ் சந்திரா கூறிய பதில்.. உற்சாகமான ரசிகர்கள்!
Vidaa Muyarchi : அஜித்தின் 'விடாமுயற்சி' ரிலீஸ் எப்போது? சுரேஷ் சந்திரா கூறிய பதில்.. உற்சாகமான ரசிகர்கள்!
அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா... 'விடாமுயற்சி' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கூறி ரசிகர்களை உச்சாகப்படுத்தியுள்ளார்.

thala ajith
துணிவு படத்திற்கு பின்னர், அஜித்தின் ரசிகர்கள் அவரது அடுத்த படமான 'விடாமுயற்சி' படத்தை திரையரங்கில் பார்க்க வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஆனால் இந்த படத்தின் பணி 2023 ஆம் ஆண்டு இறுதியில் துவங்கி, தற்போது வரை 70 முதல் 80 சதவீத படபிடிப்பு மட்டுமே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை வாரி வழங்கி உள்ளார் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா.
Ajith
தல அஜித்தின் 62 ஆவது படத்தை நயன்தாராவின் காதல் கணவரான விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைக்கா நிறுவனம் அதிரடியாக அறிவித்த நிலையில், விக்னேஷ் சிவன் தன்னுடைய திருமணம், ஹனிமூன் என, நயன்தாராவுடன் நேரம் செலவிடுவதால் பிஸியாக இருந்ததால், அஜித்தின் 62-ஆவது படத்தின் கதை எழுதுவதில் கோட்டை விட்டார். அஜித்திடம் ஒன் லைன் மட்டுமே கூறி ஓகே வாங்கியவர், முழுக்கதையும் சொன்னபோது அது அஜித்துக்கு திருப்திகரமாக இல்லை.
இரண்டு, மூன்று முறை ஸ்க்ரிப்டை மாற்ற கூறிய பின்னரும்... எந்த பலனும் இல்லாததால், லைகா நிறுவனம் ஆகும் பொறுத்தது போதும் இனியும் தாமதிக்க முடியாது எனக்கூறி கை விரித்துள்ளனர். அஜித்தும் வேறு வழியின்றி விக்னேஷ் சிவனை இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து தூக்கி அடித்து விட்டு, வேறு இயக்குனர்களிடம் கதை கேட்க துவங்கினார்.
Vidamuyarchi
அப்படி கதை கேட்டுக் கொண்டிருந்த போது தான், இயக்குனர் மகிழ் திருமேனி கூறிய அல்டிமேட் ஆக்சன் கதைக்களம் கொண்ட 'விடாமுயற்சி' கதை அஜித்துக்கு பிடித்துப் போக அவரையே தன்னுடைய 62 ஆவது படத்தின் இயக்குனர் என அறிவித்தார். மேலும் மகிழ் திருமேனி கூறிய கதையின் பட்ஜெட் அதிகமாக இருந்த போதும் லைக்கா தரப்புக்கும் மிகவும் பிடித்து போக அவரையே ஒப்பந்தம் செய்து... கடந்த ஆண்டு இறுதியில் படத்தின் படப்பிடிப்பை துவங்கினர்.
Vidamuyarchi
பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டிலேயே எடுக்கப்பட்டு வருகிறது மேலும் இதுவரை 70 முதல் 80 சதவீத காட்சிகள் மட்டுமே எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் செல்ல உள்ளனர் என கூறப்படுகிறது. ஏற்கனவே பட குழுவை சேர்ந்தவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று, ஷூட்டிங் குறித்த முன்னேற்பாடு பணிகளை கவனித்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அஜித்தும் அங்கு செல்ல உள்ளார்.
Ajith PRO suresh Chandra
இதுவே இறுதிக்கட்ட படப்பிடிப்பாக இருக்கும் என கூறப்படும் நிலையில், தற்போது அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை கூறி அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்படி விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதி என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித் ஆதிக் இயக்கத்தில் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த தீபாவளியை தல தீபாவளிக்காக மாற்றவும் திரையரங்குகளை அதிரவைக்க வருகிறார் அஜித் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Trisha in Vidamuyarchi
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்கு பின்னர் திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நிரவ்ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.