MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கோலிவுட்டில் இது கல்யாண சீசன்! கவினை தொடர்ந்து காதல் திருமணம் செய்ய காத்திருக்கும் 6 அம்சமான ஜோடிகளின் லிஸ்ட்

கோலிவுட்டில் இது கல்யாண சீசன்! கவினை தொடர்ந்து காதல் திருமணம் செய்ய காத்திருக்கும் 6 அம்சமான ஜோடிகளின் லிஸ்ட்

Kollywood stars wedding : கோலிவுட்டில் அடுத்தடுத்த மாதங்களில் 6 அம்சமான நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 05 2023, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சினிமா பிரபலங்கள் காதல் திருமணம் செய்துகொள்வது தொடர்கதை ஆகி வருகிறது. அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, ராதிகா - சரத்குமார், குஷ்பு - சுந்தர் சி என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அண்மையில் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியை கரம்பிடித்து இருந்தார். இந்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் கோலிவுட்டில் நிறைய காதல் திருமணங்கள் நடைபெற உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்

நடிகர் அசோக் செல்வனும், நடிகை கீர்த்தி பாண்டியனும் இம்மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதி திருநெல்வேலியில் உள்ள நடிகர் அருண் பாண்டியனின் பண்ணைவீட்டில் வைத்து நடைபெற உள்ளது.

37
உமாபதி - ஐஸ்வர்யா அர்ஜுன்

உமாபதி - ஐஸ்வர்யா அர்ஜுன்

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும், நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் விரைவில் கரம்பிடிக்க உள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோரும் ஓகே சொல்லிவிட்டதால் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டு உள்ளது.

47
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது குஷி படத்தின் வெற்றியால் செம்ம ஹாப்பியாக உள்ளார். இவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. குஷி பட புரமோஷனில் கூட விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த ஆண்டே திருமணம் ஆகிவிடும் என சமந்தா கூறி இருந்தார். அதனால் புது மாப்பிள்ளை பட்டியலில் அவரும் இணைந்துள்ளார். 

இதையும் படியுங்கள்... காசுக்காக எப்படி வாய்கூசாம பொய் சொல்றாங்க பாருங்க... பிக்பாஸ் போனதால் அம்பலமான கிரணின் ஃபிராடு வேலை!

57
சித்தார்த் - அதிதி ராவ்

சித்தார்த் - அதிதி ராவ்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்ட நிலையில், தற்போது அவர் நடிகை அதிதி ராவை காதலித்து வருகிறார். திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழும் இந்த ஜோடி, விரைவில் திருமண பந்தத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

67
தமன்னா - விஜய் வர்மா

தமன்னா - விஜய் வர்மா

ரசிகர்களால் மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கப்படும் நடிகை தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருமே தற்போது நடிப்பில் பிசியாக உள்ளனர். அண்மையில் தான் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்த ஜோடி, இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்யும் ஐடியாவில் உள்ளதாம்.

77
அமீர் - பாவனி

அமீர் - பாவனி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பாவனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடன இயக்குனர் அமீர் மீது காதல் வயப்பட்டார். தற்போது அமீரும், பாவனியும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் உள்ளனர். விரைவில் இந்த ஜோடியும் திருமண பந்தத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஜவான் படத்திற்கு அட்லி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியாம்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved