MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • காசுக்காக எப்படி வாய்கூசாம பொய் சொல்றாங்க பாருங்க... பிக்பாஸ் போனதால் அம்பலமான கிரணின் ஃபிராடு வேலை!

காசுக்காக எப்படி வாய்கூசாம பொய் சொல்றாங்க பாருங்க... பிக்பாஸ் போனதால் அம்பலமான கிரணின் ஃபிராடு வேலை!

காசு கொடுத்தால் கவர்ச்சி காட்டுவதாக கூறி நடிகை கிரண் மோசடி செய்து வருவது தற்போது அவர் பிக்பாஸ் போனதால் அம்பலமாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 05 2023, 10:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
kiran rathore

kiran rathore

தமிழ் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் கிரண். வின்னர், அன்பே சிவம், ஜெமினி போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்த இவர், விஜய், விஷால், விஜயகாந்த், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி பாப்புலர் ஆனார். தற்போது வயது 40-ஐ கடந்து விட்டதால், நடிகை கிரணுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு கவர்ச்சியை வைத்து கல்லாகட்ட முடிவெடுத்தார் கிரண்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
kiran rathore in BiggBoss Telugu

kiran rathore in BiggBoss Telugu

கடந்தாண்டு கிரண் ரத்தோர் ஓடிடி என்கிற பெயரில் தனக்கான பிரத்யேக செயலி ஒன்றை தொடங்கிய கிரண். அதில் காசு கட்டி சேரும் ரசிகர்கள் தன்னுடைய எக்ஸ்குளூசிவ் ஆன கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்களை பார்ப்பது மட்டுமின்றி தன்னுடன் வீடியோ கால் மற்றும் டேட்டிங்கும் செய்ய முடியும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதில் தன்னுடன் வீடியோ காலில் பேச ரூ.15 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டு அதற்கான விலை பட்டியலையும் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்... ஷங்கர் மகள் அதிதியின் அடுத்த டார்கெட் விஜய்யா?... ரோல்ஸ் ராய்ஸ் காரில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்

34
kiran rathore Insta Story

kiran rathore Insta Story

இந்த செயலி மூலம் நடிகை கிரண் தில்லுமுல்லு வேலை செய்து வருவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தாலும், அது பெரியளவில் கவனிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் நடிகை கிரண் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் அவர் தனது ஓடிடி செயலி மூலம் ஃபிராடு வேலை செய்து வந்தது அம்பலமாகி உள்ளது. இதனால் ரசிகர்களிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளார் கிரண்.

44
kiran rathore OTT

kiran rathore OTT

பிக்பாஸுக்கு போனதும் தன்னுடைய அட்மின் மூலம் தன்னுடைய செயலியை புரமோட் செய்யும் விதமாக அதன் லிங்கை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். அதை ஓப்பன் செய்த உடனே தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தன்னுடன் வீடியோ காலில் பேச என்னுடைய செயலியில் இணையுங்கள் என குறிப்பிட்டுள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் கிரண் எப்படி வீடியோ காலில் பேச முடியும். இதன்மூலம் அவரின் பிராடு வேலை அம்பலமாகி உள்ளது. காசுக்காக இப்படி வாய் கூசாமல் பொய் சொல்லி மாட்டிக் கொண்ட நடிகை கிரணை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... செம்ம மாஸா இருக்கே... இத ஏன் படத்துல வைக்கல? ஜெய் பீமில் இப்படி ஒரு சண்டைக் காட்சியா? வைரலாகும் டெலிடெட் சீன்

 

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved