MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 6 சீசன் முடிஞ்சாச்சு... பிக்பாஸ் டைட்டில் வின்னர்களுக்கு என்னாச்சு? ஆறு வெற்றியாளர்களின் நிலைமை என்ன?

6 சீசன் முடிஞ்சாச்சு... பிக்பாஸ் டைட்டில் வின்னர்களுக்கு என்னாச்சு? ஆறு வெற்றியாளர்களின் நிலைமை என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்க உள்ள நிலையில், இதற்கு முன் நடந்து முடிந்த ஆறு சீசன் வெற்றியாளர்களின் நிலைமை குறித்து பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Sep 26 2023, 10:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
BiggBoss Title winners

BiggBoss Title winners

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை முடிந்துள்ள 6 சீசன்களில் முதல் சீசனில் ஆரவ் டைட்டில் வின்னர் ஆனார். அதேபோல் இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும் டைட்டிலை தட்டிச் சென்றனர். நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடைசியாக நடந்துமுடிந்த ஆறாவது சீசனில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். இவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

28
ஆரவ்

ஆரவ்

பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னர் ஆன ஆரவ், ஹேண்ட்ஸம் லுக்கில் கட்டுமஸ்தான் உடம்போடு இருந்ததால், தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யார் கண்ணு பட்டுச்சோ இவர் நடித்த முதல் படமே அட்டர் பிளாப் ஆனது. மார்க்கெட் ராஜா என்கிற அப்படம் தோல்வியடைய, அடுத்ததாக ராஜபீமா என்கிற படத்தில் நடித்தார் அப்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இதனால் ஹீரோவாக மார்க்கெட் இழந்த ஆரவ் வேறுவழியின்றி வில்லனாக நடித்து வருகிறார். கலகத் தலைவன் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்த அவர், தற்போது விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

38
ரித்விகா

ரித்விகா

நடிகை ரித்விகாவின் கெரியரையும் பிக்பாஸுக்கு முன், பின் என பிரித்துவிடலாம். இவர் பிக்பாஸ் 2-வது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸ் வரலாற்றில் டைட்டில் ஜெயித்த ஒரே பெண் போட்டியாளர் என்கிற சாதனையையும் ரித்விகா படைத்துள்ளார். பிக்பாஸுக்கு முன்னர் வரை சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த ரித்விகாவுக்கு பிக்பாஸுக்கு பின்னர் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டன. இவருக்கு தற்போது சுத்தமாக பட வாய்ப்பு இல்லை.

48
முகென் ராவ்

முகென் ராவ்

மலேசியாவை சேர்ந்தவரான முகென் ராவ் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் முகென். இவர் நடிப்பில் வெளிவந்த வேலன் திரைப்படம் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து நடித்த மதில்மேல் காதல் படமும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிப்போய் உள்ளது. அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த மை3 என்கிற வெப் தொடரும் சுமாரான வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

58
ஆரி அர்ஜுனன்

ஆரி அர்ஜுனன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆரி அர்ஜுனன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு ஆரிக்கு அடுத்தடுத்து அரை டஜன் படங்கள் கிடைத்தன. அதில் அலேக்கா, பகவான், டி.என்43, மேன் என நான்கு படங்கள் நீண்ட நாட்களாகவே கிடப்பில் போடப்பட்டு உள்ளன. ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததால் சைடு ரோலில் நடிக்க தொடங்கிய ஆரி, கடைசியாக உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார்.

68
ராஜு

ராஜு

விஜய் டிவியில் பணியாற்றியவரான ராஜு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி டைட்டிலையும் தட்டிச் சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய் டிவியே இவருக்கு ராஜு வீட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்ச்சி முடிந்ததும் விஜய்யின் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ராஜுவுக்கு இதுவரை சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தபாடில்லை.

78
அசீம்

அசீம்

பிக்பாஸ் வரலாற்றில் அதிக நெகட்டிவிட்டியோடு ஜெயித்த போட்டியாளர் என்றால் அது அசீம் தான். 6-வது சீசனில் டைட்டில் வின்னர் ஆன அசீம், பிக்பாஸில் ஜெயித்த பணத்தில் பாதியை பெற்றோரை இழந்த ஏழை குழந்தைகளின் படிப்புக்கு கொடுத்தார். பிக்பாஸுக்கு முன்னர் வரை சீரியலில் நடித்து வந்த அசீம், பிக்பாஸுக்கு பின் சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதுவரை அவருக்கும் சினிமாவில் ஹீரோவாக நடிக்க எவ்வித அழைப்பும் வரவில்லை.

88
அடுத்தது யார்?

அடுத்தது யார்?

இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆஹா.. ஓஹோ என கொண்டாடப்பட்டாலும் அந்நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்றதும் அவர்களின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விடுகிறது. பிக்பாஸில் இருந்து வெளியே போய் சாதித்த பிரபலங்கள் என்றால் ஹரிஷ் கல்யாண், கவின் என ஒருசிலர் மட்டுமே, மற்ற அனைவருக்கும் பிக்பாஸ் 100 நாள் கூத்தாக மட்டுமே இருந்துள்ளது. 6 சீசன் வெற்றியாளர்களே இந்த நிலைமையில் இருக்க, தற்போது 7 சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது பிக்பாஸ். இந்த முறையாவது டைட்டில் வின்னர்கள் சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... விஜய் மகன் இயக்கும் படத்துக்கு இசையமைக்க மறுத்தாரா அனிருத்?... ஜேசன் சஞ்சய் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved