MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • விஜய் மகன் இயக்கும் படத்துக்கு இசையமைக்க மறுத்தாரா அனிருத்?... ஜேசன் சஞ்சய் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

விஜய் மகன் இயக்கும் படத்துக்கு இசையமைக்க மறுத்தாரா அனிருத்?... ஜேசன் சஞ்சய் படத்தில் நடந்த அதிரடி மாற்றம்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு அனிருத் இசையமைக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Sep 26 2023, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vijay son

vijay son

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யும் தற்போது கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார். தந்தையைப் போல் நடிகராக விரும்பாத அவர் தன் தாத்தா எஸ்.ஏ.சியின் ரூட்டை பிடித்து இயக்குனராக களமிறங்கி உள்ளார். 

24
Jason sanjay, vijay

Jason sanjay, vijay

ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் விஜய் சேதுபதி முதலில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என பேச்சு அடிபட்டது. பின்னர் அது வெறும் வதந்தி என உறுதியான நிலையில், இறுதியாக பிக்பாஸ் பிரபலம் கவினை வைத்து தான் ஜேசன் சஞ்சய் தன்னுடைய முதல் படத்தை இயக்க உள்ளாராம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Jason sanjay debut movie

Jason sanjay debut movie

ஹீரோவைபோல் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் குறித்து பல்வேறு தகவல் பரவி வந்தன. முதலில் இப்படத்திற்கு அனிருத்தை இசையமைக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அவரோ கோலிவுட் முதல் பாலிவுட் வரை கைவசம் டஜன் கணக்கிலான படங்களுடன் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுற்றி வருவதால், தற்போது அவருக்கு பதில் வேறு இசையமைப்பாளரை கமிட் செய்துள்ளார்களாம்.

44
Yuvan Anirudh

Yuvan Anirudh

அவர் வேறுயாருமில்லை, யுவன் சங்கர் ராஜா தான். ஏற்கனவே விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படத்துக்கு இசையமைத்து வரும் யுவன், தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் படத்துக்கும் இசையமைக்க உள்ள தகவல் தான் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. யுவன் சங்கர் ராஜா ஒரே நேரத்தில் தந்தை மற்றும் மகனுடன் பணியாற்ற உள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஆத்தா படத்தை எப்படியாச்சும் ஹிட் ஆக்கிடு... பெத்தம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்த ‘சந்திரமுகி 2’ படக்குழு..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அனிருத் ரவிச்சந்தர்
ஜேசன் சஞ்சய்
தளபதி விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved