ஆத்தா படத்தை எப்படியாச்சும் ஹிட் ஆக்கிடு... பெத்தம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்த ‘சந்திரமுகி 2’ படக்குழு..!
சந்திரமுகி 2 படத்தின் புரமோஷனுக்காக ஐதராபாத் சென்றிருந்த படக்குழு பெத்தம்மா தல்லி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
chandramukhi 2 team
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த திரைப்படம் சந்திரமுகி 2. கடந்த 2005-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் ரஜினி உடன் வடிவேலு, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, நாசர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி இப்படம் சாதனை படைத்த நிலையில், தற்போது 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.
chandramukhi 2 team temple visit
இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். மேலும் சந்திரமுகியாக முதல் பாகத்தில் ஜோதிகா மாஸ் காட்டிய நிலையில், இரண்டாம் பாகத்தில் அந்த கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வடிவேலு, ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
chandramukhi 2 team at peddamma thalli temple
சந்திரமுகி 2 படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
chandramukhi 2 movie team
சந்திரமுகி 2 படத்தின் புரமோஷனுக்காக ஐதராபாத் சென்றிருந்த படக்குழுவினர், அங்குள்ள பிரசித்தி பெற்ற பெத்தம்மா தல்லி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். படம் வெளியாகி வெற்றியடைய வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை கங்கனா ரனாவத், மகிமா நம்பியார் மற்றும் இயக்குனர் பி வாசு ஆகியோர் இந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... வேட்டையனாக வந்து காலில் விழுந்த ராகவா லாரன்ஸ்... கட்டியணைத்து வாழ்த்திய ரெக்கார்ட் மேக்கர் ரஜினி..!