MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஷண்முகம் வீட்டை அபேஸ் பண்ண பார்த்த செளந்தரபாண்டிக்கு செம்ம ஆப்பு வைத்த பரணி - அண்ணா சீரியல் வேறலெவல் ட்விஸ்ட்

ஷண்முகம் வீட்டை அபேஸ் பண்ண பார்த்த செளந்தரபாண்டிக்கு செம்ம ஆப்பு வைத்த பரணி - அண்ணா சீரியல் வேறலெவல் ட்விஸ்ட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சௌந்தரபாண்டி வீட்டுக்கு பூட்டு போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 27 2024, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna Serial

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டுக்கு பூட்டு போட பதிலுக்கு பரணி சௌந்தரபாண்டி வீட்டுக்கு பூட்டு போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சண்முகத்தின் குடும்பத்தினர் வீட்டுக்குள் செல்ல முடியாமல் வெளியில் தங்கி இருக்க, சண்முகம் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கி வந்து கொடுக்க பக்கத்து வீட்டு பெண்மணி சாப்பாடு இல்லாமல் கூட இருந்திடலாம் தண்ணி இல்லாம எப்படி இருக்க முடியும் என்று ஒரு குடம் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்கிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Zee Tamil Anna Serial

Zee Tamil Anna Serial

இப்படி அக்கம் பக்கத்தினர் எல்லோரும் சண்முகத்தின் குடும்பத்தை கவனித்துக் கொள்கின்றனர்.  அதேபோல் மறுபக்கம் சௌந்தரபாண்டி குடும்பத்தினர் கோவிலில் தங்கி இருக்க, சௌந்தரபாண்டி அரண்மனை மாதிரி இருந்த வீட்ல வாழ்ந்த என்னை இப்படி வெளியில தங்க வச்சுட்டாங்களே என்று புலம்புகிறார். இந்த சமயத்தில் பாக்கியம், இசக்கி மற்றும் சிவபாலன் என மூன்று பேரும் கோவிலில் உட்கார்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்து சௌந்தரபாண்டி இன்னும் கடுப்பாகிறார்.

இதையும் படியுங்கள்... Dhanush : ரஜினி மகள் உடன் விவாகரத்து... விரைவில் தனுஷுக்கு இரண்டாவது திருமணம்?... பொண்ணு யார் தெரியுமா?

34
Anna Serial Update

Anna Serial Update

பிறகு ஏஜிஎஸ்க்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்கலாம் என்று முடிவு எடுக்க, பாக்கியம் என் பொண்ணு வீடு இல்லாம வெளியே கிடக்கின்றது நான் எப்படி வர முடியும் வரமாட்டேன் என்று சொல்லி சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றுகிறாள். மறுநாள் பஞ்சாயத்து கூட சௌந்தரபாண்டி சண்முகம் என்கிட்ட தான் பணத்த கடனை வாங்கி இருக்கேன் அதுக்கான பத்திரம் என்கிட்ட இருக்கு என்று சொல்லி காட்ட, சண்முகம் நான் அண்ணாச்சி கிட்ட தான் கடன் வாங்கி இருந்தேன் என்று சொல்ல, சௌந்தரபாண்டி கொடுத்த பத்திரத்தில் சௌந்தரபாண்டியிடம் கடனாக வாங்குகிறேன் என்று தான் எழுதி இருக்கிறது. இது தெரியாமல் சண்முகம் கையெழுத்து போட்டது தெரிய வருகிறது. 

44
Anna Serial Today Episode

Anna Serial Today Episode

அடுத்து பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் பாக்கியம் பரணியை தனியாக சந்தித்து ஒரு கவரை கொடுக்க, பிறகு பரணி பஞ்சாயத்துக்கு வந்து அவர் சொன்னா மாதிரி எங்க வீட்டை அவரே எடுத்துக்கட்டும். எனக்கு ஒரு வீடு இருக்கு.. அந்த வீட்டுக்கு நான் உங்கள கூட்டிட்டு போறேன் அதை இவரால தடுக்க முடியாது என்று சொன்னதும் சௌந்தரபாண்டி உனக்கு என்ன வீடு இருக்கு என்று கேள்வி கேட்க, நீங்க இருக்கிறீங்களே அதுவே என்னுடைய வீடு தான்.. என் பெயர்ல தான் இருக்கு என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... அம்மாவுக்கு ஃபேவரட் இடம்... பாவாடை தாவணியில் சென்னை முப்பாத்தம்மன் கோவிலுக்கு வந்த ஜான்வி கபூர்! போட்டோஸ்!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved