MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அண்ணா சீரியல் : ஷண்முகத்தின் உண்டியலை அபேஸ் பண்ண பிளான் போடும் சௌந்தரபாண்டி.. ஸ்கூலை கைப்பற்ற போவது யார்?

அண்ணா சீரியல் : ஷண்முகத்தின் உண்டியலை அபேஸ் பண்ண பிளான் போடும் சௌந்தரபாண்டி.. ஸ்கூலை கைப்பற்ற போவது யார்?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் வைத்த உண்டியலில் ஊர் மக்கள் நகையையும் பணத்தையும் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 06 2024, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna serial

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் வைத்த உண்டியலில் ஊர் மக்கள் நகையையும் பணத்தையும் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சனியன் ஓடி வந்து சௌந்தரபாண்டியிடம் இந்த விஷயத்தை சொல்ல சத்தமாக சிரிக்கும் அவர் இந்த ஊர்ல அந்த ஸ்கூலை வாங்க தகுதியான ஆள் நான் ஒருத்தன் மட்டும் தான் என்று சொல்கிறார்.

24
Zee Tamil Anna serial

Zee Tamil Anna serial

இதைப்பார்த்த இசக்கி ரொம்ப சிரிக்காதீங்க எங்க அண்ணன் எப்படியும் உங்களை அந்த இடத்தை வாங்க விடாது என்று சவால் விடுகிறாள். பாக்கியம் எல்லாரும் காசு போட்டார்களா என்று சனியனிடம் கேட்க, அவன் ஆமாம் என்று சொல்ல, உங்க புள்ள குட்டியும் அந்த ஸ்கூலில் தான் படிக்குது, அதை இடிச்சிட்டா உங்க பிள்ளைகளோட வாழ்க்கையை நினைத்து பாருங்க என்று அறிவுரை சொல்கிறாள். 

இதையும் படியுங்கள்... விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழின் நளதமயந்தி சீரியலுக்கு தாவிய பிரபல நடிகை... காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்

34
Anna serial Update

Anna serial Update

மறுபக்கம் வீட்டில் ஷண்முகம் உண்டியலுக்கு பூஜை போட்டு கொண்டிருக்க வைகுண்டம் அதை சாய்த்து பார்த்து பணம் கம்மியா தான் இருக்கும் போல், இப்பவும் சொல்றேன் அந்த ஸ்கூல் வாங்குறதை கை விட்டுடலாம், இல்லனா நம்ம தான் அவமானப்பட்டு நிற்கணும் என்று சொல்ல, ஷண்முகம் வைகுண்டத்தை அடிக்க துரத்த அவர் ரூமுக்குள் ஓடி ஒளிகிறார். அடுத்து சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் நாளைக்கு நீ வேலைக்கு போகாதே, ஸ்கூலை வாங்க நீ கையெழுத்து போடணும் என்று சொல்கிறார். 

44
Anna serial Today Episode

Anna serial Today Episode

சிவபாலன் நானும் போடணுமா என்று கேட்க, சௌந்தரபாண்டி நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம் என்று திட்டி விடுகிறார். முத்துபாண்டியை தனியாக அழைத்து சென்று ஷண்முகம் வீட்டில் இருக்கும் உண்டியலை தூக்கிடலாமா என்று கேட்க, அதற்கெல்லாம் அவசியமில்லை, அவ்வளவு பணம் சேர்ந்து இருக்காது என்று சொல்ல, சௌந்தரபாண்டி அந்த உண்டியலை தூக்கிடலாம் என்று உறுதியாக சொல்லி ஒரு ஐடியாவும் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Suriya Daughter Diya: +12 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சூர்யா - ஜோதிகாவுக்கு பெருமை சேர்த்த தியா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved