MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தும் அனிதா விஜயகுமார்... இத்தனை கோலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பா?

மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தும் அனிதா விஜயகுமார்... இத்தனை கோலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பா?

நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா தனது மகள் தியாவின் திருமணத்துக்கு கோலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுத்து வருகிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 05 2024, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anitha vijayakumar meet Rajinikanth

Anitha vijayakumar meet Rajinikanth

நடிகர் விஜயகுமாரின் வாரிசுகளில் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஒரே ஒரு மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். கவிதா கூட ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் அனிதாவுக்கு சினிமா மீது சுத்தமாக ஆர்வம் இல்லை. இதனால் சினிமாவுக்கு நோ சொல்லிவிட்டு டாக்டருக்கு படித்து மருத்துவராகிவிட்டார். இவர் தன்னுடன் படித்த கோகுல் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்.

24
vijayakumar, Rajinikanth

vijayakumar, Rajinikanth

திருமணத்துக்கு பின்னர் கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆன அனிதா, கடந்த ஆண்டு சென்னையில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி அதற்கு கிரஹப்பிரவேஷமும் நடத்தினார். வீட்டுக்கு கிரஹப் பிரவேஷம் செய்த கையோடு, தன் மகளின் திருமணம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டனர். அனிதாவுக்கு தியா என்கிற மகளும், ஸ்ரீஜெய் என்கிற மகனும் உள்ளனர். இதில் தியா மருத்துவம் படித்து இருக்கிறார். 

இதையும் படியுங்கள்... பேமிலியோடு அக்காவின் காதலனை அடிக்கப் போன அருண் விஜய்... சினிமா பாணியில் விஜயகுமார் குடும்பத்தில் நடந்த சம்பவம்

34
anitha vijayakumar family with Rajinikanth

anitha vijayakumar family with Rajinikanth

தியாவின் திருமணம் சென்னையில் இம்மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. திருமண வேலைகளை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செய்து வரும் அனிதா விஜயகுமார், தற்போது பத்திரிக்கை வைக்கும் பணிகளில் பிசியாக இருக்கிறார். குறிப்பாக கோலிவுட் பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். முன்னதாக சூர்யாவின் பேமிலிக்கு பத்திரிக்கை வைத்த அனிதா தற்போது சூப்பர்ஸ்டாருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.

44
anitha vijayakumar meet Dhanush

anitha vijayakumar meet Dhanush

தனது தந்தை விஜயகுமார், அக்கா கவிதா மற்றும் மகனுடன் சென்று மகள் தியாவின் திருமண அழைப்பிதழை சூப்பர்ஸ்டாரிடம் வழங்கி இருக்கிறார் அனிதா. அப்போது ரஜினி உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ரஜினி அங்கிள் என கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். இதுதவிர நடிகர் தனுஷையும் அவரது இல்லத்தில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி இருக்கிறார் அனிதா. இதன்மூலம் அனிதா மகள் திருமணத்தில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ஒன்னு இல்ல.. இரண்டு இல்ல.. மொத்தம் நாலு - அடுக்கடுக்காக Period Filmsல் நடிக்கும் சூர்யா - முழு லிஸ்ட் இதோ!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved