பிசினஸில் கொடிகட்டி பறக்கும் பிரபல தொகுப்பாளினி.. புதிதாக திறக்கப்பட்ட டான்ஸ் ஸ்டுடியோவின் போட்டோஸ் இதோ..
தனது டான்ஸ் ஸ்டுடியோவின் 2-வது கிளையை பிரபல தொகுப்பாளினி கிகி சாந்தனு திறந்துள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளினிகளில் கிகி என்று அழைக்கப்படும் கீர்த்தி முக்கியமானவர். இதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக மாறினார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி, தனியார் நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா, சக்சஸ் மீட் போன்ற நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே நடிகர் சாந்தனுவை கிகி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை நடிகர் விஜய் முன்னின்று நடத்தி வைத்தார்.
இந்த தம்பதி அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருவதுடன் With Love Shanthnu Kiki என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கிகி ஏற்கனவே தனது பெயரில் டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.. தனது ஸ்டுடியோவில் பிரபலங்கள் டான்ஸ் ஆடும் வீடியோக்களை கிகி சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்த சூழலில் தனது டான்ஸ் ஸ்டுடியோவின் 2-வது கிளையை கிகி திறந்துள்ளார். சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டுடியோவை நடிகை சுஹாசினி திறந்து வைத்துள்ளார். கிகியின் கணவரும், நடிகருமான சாந்தனு பாக்யாராஜ், அவரின் மாமியாரும் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டர்.
மேலும் பரத், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜனனி, கலையரசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் இதில் கலந்து கொண்டனர். புதிய டான்ஸ் ஸ்டுடியோ திறந்துள்ள கிகிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.