- Home
- Gallery
- Garuda Puranam : காலையில் எழுந்தவுடன் 'இதை' மட்டும் செய்யுங்கள்.. பணத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராது..!
Garuda Puranam : காலையில் எழுந்தவுடன் 'இதை' மட்டும் செய்யுங்கள்.. பணத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராது..!
கருட புராணத்தின் படி, காலையில் எழுந்த உடனே சில காரியங்களைச் செய்தால், வாழ்வில் துன்பம் இருக்காது மற்றும் எதிர்மறையும் நீங்கும்.

Garuda Purana
இந்து மதத்தில் கருட புராணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. அதன்படி, சில முறைகளை கடைபிடிப்பதால் பல வகையான பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். மேலும், வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும். அதுமட்டுமின்றி, நிறைய நல்லது நடக்கும். அந்த விஷயங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
குளிப்பது: காலையில் எழுந்தவுடன் குளிக்க வேண்டும் ஆனால் பல இதை செய்ய விரும்புவதில்லை. கருடபுராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில், உடல் மற்றும் மனத்தின் தூய்மைக்காக குளிப்பது அவசியம் என்று சொல்லுகிறது.
தானம் செய்யுங்கள்: ஒவ்வொருவரும் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்ய வேண்டும் என்கிறது கருடபுராணம். காலைக் குளித்த பின் செய்யும் தொண்டு, ஒரு மனிதனின் வீட்டில் உணவுக்கும் பணத்துக்கும் ஒருபோதும் பஞ்சமில்லை. அதுமட்டுமின்றி, வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் கிடைக்கும்.
தீபம் ஏற்றவும்: காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு பூஜை செய்ய வேண்டும் என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது வீட்டுச் சூழலைச் சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, எதிர்மறையையும் விலகி வீட்டில் மகிழ்ச்சியை கொடுக்கும்.
இதையும் படிங்க: மரணம் உங்களை நெருங்குவதைக் காட்டும் மோசமான அறிகுறிகள்..! நீங்களும் இவற்றைப் பார்த்திருக்கிறீர்களா?
கடவுளை வணங்குங்கள்: காலையில் குளித்த பிறகு கடவுளை நினைத்து வணங்க வேண்டும். சிலைகளை வழிபடுவதன் மூலம் இறைவனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும்.
இதையும் படிங்க: கருட புராணம்: இந்த பழக்கங்கள் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் சச்சரவு மற்றும் துன்பத்தை ஏற்படுத்தும்..!!
மந்திரங்களை உச்சரிப்பது: காலையில் எழுந்தவுடன் மந்திரங்களை உச்சரித்தால் பெரிய பிரச்சனைகள் கூட தீரும் என்று சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமின்றி, தடைகள் மற்றும் சிரமங்கள் கூட நீங்கும். எனவே, காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, பூஜை, பாராயணம் செய்ய மறகாதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D