- Home
- Gallery
- Garudan Day 1 Collection: முதல் நாளே கோடியில் வசூலை அள்ளிய சூரியின் கருடன்! முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
Garudan Day 1 Collection: முதல் நாளே கோடியில் வசூலை அள்ளிய சூரியின் கருடன்! முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்!
'விடுதலை' படத்தை தொடர்ந்து நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்துள்ள 'கருடன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

garudan
தமிழ் சினிமாவில், கடுமையான சவால்களை கடந்து தன்னுடைய திறமையால் மட்டுமே முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சூரி. கடந்த ஆண்டு இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த 'விடுதலை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கூடிய விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, நேற்று இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கருடன்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படம் வெளியான முதல் நாளே, ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில், முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.4 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து சனி - ஞாயிறு விடுமுறை நாள் என்பதால்... வசூல் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். விடுதலை வெற்றிக்கு பின்னர் சூரிக்கு இப்படம் நல்ல ஓப்பனிங்காக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.