- Home
- Gallery
- பிரைவேட் ஜெட்.. சொகுசு கார்கள்.. மகனின் ப்ரீ வெட்டிங் விழா விருந்தினர்களை தடபுடலாக கவனித்த அம்பானி..
பிரைவேட் ஜெட்.. சொகுசு கார்கள்.. மகனின் ப்ரீ வெட்டிங் விழா விருந்தினர்களை தடபுடலாக கவனித்த அம்பானி..
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் தங்களின் உயர்மட்ட விருந்தினர்களுக்காக அம்பானி குடும்பம் தடபுடல் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ketty pary
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் 2-வது ப்ரீ வெட்டின் கொண்டாட்டம் கவனத்தை ஈர்த்து வருகிறது. இத்தாலியில் தொடங்கிய இந்த கொண்டாட்டம் இன்று பிரான்சில் நிறைவடையும் இந்த கொண்டாட்டங்கள் பல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Anant Ambani radhika , Rihanna
இந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் பங்கேற்க வரும் தங்களின் உயர்மட்ட விருந்தினர்களுக்காக அம்பானி குடும்பம் தடபுடல் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மே 28, 2024 அன்று, 10 விமானங்கள் பாலிவுட் பிரபலங்களை ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவிற்கு கொண்டு சென்றன. இது உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் விருந்தினர்களை அழைத்து வர இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும் 12 தனியார் விமானங்களை ஏற்பாடு அம்பானி குடும்பத்தினர் செய்தனர். இவை குடும்ப உறுப்பினர்கள், வணிகப் பங்காளிகள், நண்பர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் நிகழ்வு ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு விமானத்திற்கும் பல கோடி ரூபாய்க்கு மேல் செலவானதாம்..
பிரபலங்களை அழைத்து செல்ல சுமார் 150 உயர்தர கார்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீஸ், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய சொசு கார்கள் ஆகியவை அடங்கும். இந்த சொகுசு கார்களில் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் அம்பானி குடும்பத்தினர் பாரம்பரிய இந்திய உணவு வகைகள் மற்றும் சர்வதேச உணவு வகைகளின் கலவையைக் கொண்ட ஒரு மெனுவைத் தயாரித்தனர். மேலும் அரங்குகள் அதிநவீன ஒலி மற்றும் ஒளி அமைப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்து.
இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்வுகள் மே 29 முதல் ஜூன் 1, 2024 வரை ஸ்பெயினில் ஒரு ஆடம்பரமான உல்லாசப் பயணக் கப்பலில் நடந்தன. ஆனந்த் - ராதிகா திருமணம் ஜூலை 12, 2024 அன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.