MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • T20 World Cup 2024: சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் டாப் 8 டீம்ஸ் என்னென்ன? யாருக்கெல்லாம் வாய்ப்பு?

T20 World Cup 2024: சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் டாப் 8 டீம்ஸ் என்னென்ன? யாருக்கெல்லாம் வாய்ப்பு?

டி20 உலகக் கோப்பை தொடருக்கான 20 அணிகளில் எந்த அணிகள் டாப் 8 இடங்களுக்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Rsiva kumar
Published : Jun 01 2024, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
T20 World Cup 2024

T20 World Cup 2024

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் இந்திய நேரப்படி ஜூலை 2 ஆம் தேதி நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.

29
T20 World Cup 2024

T20 World Cup 2024

இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நேபாள், பாகிஸ்தான், கனடா, ஓமன், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், நமீபியா, ஆப்கானிஸ்தான், உகாண்டா, நெதர்லாந்து என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

39
T20 World Cup 2024

T20 World Cup 2024

இந்த 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் உள்ளன. இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அப்படி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.

49
T20 World Cup 2024

T20 World Cup 2024

குரூப் ஏ: கனடா, அயர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா.

இந்த குரூப்பில் இடம் பெற்ற 5 அணிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மட்டுமே மற்ற போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். ஆனால், தற்போது அயர்லாந்து பலம் வாய்ந்த அணியாக வலம் வருகிறது என்பதால் அயர்லாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

59
Indian Team Practice

Indian Team Practice

குரூப் பி: நமீபியா, ஓமன், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.

இதில், மற்ற அணிகளை விட ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பலம் வாய்ந்த அணிகள் என்பதால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஸ்காட்லாந்து கூட கடந்த சில போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

69
T20 World Cup 2024

T20 World Cup 2024

குரூப் சி: பப்புவா நியூ கினியா, உகாண்டா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான்.

இதில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலம் வாய்ந்த அணிகள் என்பதால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும். ஆனால், 2 அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

79
T20 World Cup 2024

T20 World Cup 2024

குரூப் டி: தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், நெதர்லாந்து.

இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

89
T20 World Cup 2024

T20 World Cup 2024

சூப்பர் 8 சுற்று:

சூப்பர் 8 சுற்றில் 8 அணிகள் 4 அணிகளாக 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில், ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களில் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

99

அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணிகள் தவிர ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாகிஸ்தான்
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved