MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Amala Paul: வயிற்றில் குழந்தை... கணவர் மடியில் படுத்து கொண்டு ஆடம்பரம் இன்றி அமலாபால் கொண்டாடிய காதலர் தினம்!

Amala Paul: வயிற்றில் குழந்தை... கணவர் மடியில் படுத்து கொண்டு ஆடம்பரம் இன்றி அமலாபால் கொண்டாடிய காதலர் தினம்!

நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு தன்னுடைய காதலர் தினத்தை ஈஷா யோகா மையத்தில் கொண்டாடியதாக கூறி இதுகுறித்த சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 15 2024, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பால், இயக்குனர் ஏ.எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் ஒரு வருடம் நடிப்புக்கு இடைவெளி விட்டாலும்... அதை தொடர்ந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். அமலா பாலின் ரீ-என்ட்ரிக்கு ஆரம்பத்தில் அவரின் முதல் கணவர் ஓகே சொன்னாலும், பின்னர் இதுவே இவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

ஒரு கட்டத்தில், இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் பயணிக்க முடியாது என்கிற முடிவை எடுத்ததால்... தங்களுடைய விவாகரத்தை அதிகார பூர்வமாக அறிவித்தனர். விவாகரத்துக்கு பின்னர், ஆன்மீகத்தில் கவனம் செலுத்த துவங்கிய அமலா பால், சிவன், முருகர், என பல இந்து கடவுள்களை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

காதல் கணவருடன் தாஜ்மஹாலில் காதலர் தினத்தை கொண்டாடிய சீரியல் நடிகை ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்

37

மேலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது... தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து காடு, மலை, அருவி, போன்ற இயற்க்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு ட்ரக்கிங் செல்வத்தையும் வழக்கமாக வைத்திருந்தார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார்.

47

இந்நிலையில், நடிகை அமலா பால் கடந்த நவம்பர் மாதம்... தன்னுடைய நீண்ட நாள் நண்பரான ஜகத் தேசாய் காதலை ஏற்றுக்கொண்ட, வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்ட நிலையில்... காதலை ஏற்றுக்கொண்ட ஒரே வாரத்தில் காதலரை கரம்பிடித்தார். 

ரசிகர்களை உலுக்கிய டாப் நடிகைகளின் மரணம்.. பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்..

57

திருமணத்திற்கு முன்பே அமலாபால் கர்ப்பமாக இருந்தது தான் இந்த அவசர திருமணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. அதற்க்கு ஏற்றாப்போல் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு... அமலா பாலும் உறுதி செய்தார். இந்நிலையில் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில்... தன்னுடைய காதலர் தின கொண்டாட்டத்தை அமலா பால் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

67

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அமலாபால் கூறியுள்ளதாவது... காதலர் தினத்தன்று, ஜகத்தும் நானும் யோகா மற்றும் ஈஷா மீதான எனது ஆழ்ந்த அன்பைக் கொண்டாடினோம், அன்பு என்பது எப்படிக் கொடுப்பது, பெறுவது, கவனிப்பது, பகிர்வது மற்றும் எளிமையாக இருப்பது ஆகியவற்றைக் குறிக்கிறது. அன்பு மனம், உடல் மற்றும் ஆன்மாவை கடக்கட்டும் - இது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு. என தெரிவித்துள்ளார். 

குளு குளு வெண்பனி போல... காதலர் தினத்தை வெளிநாட்டில் கொண்டாடும் பிரியா பவானி சங்கர் - வைரலாகும் போட்டோஸ் இதோ

77

பல காதலர்கள், இந்த காதலர் தினத்தை... மிகவும் ரொமான்டிக்காக பாரிஸ், தாஜ்மகால் போன்ற இடங்களில் கொண்டாடியுள்ள நிலையில்... அமலாவும் - ஜகத்தும் ஈஷா யோகா மையத்தில் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி, அமைதியான முறையில் கொண்டாடியுள்ளனர்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved