MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரசிகர்களை உலுக்கிய டாப் நடிகைகளின் மரணம்.. பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்..

ரசிகர்களை உலுக்கிய டாப் நடிகைகளின் மரணம்.. பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்..

இளம் வயதிலேயே மர்மமான முறையில் மரணமடைந்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
Published : Feb 14 2024, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பாலிவுட் சினிமாவில் ஜொலித்து வந்த இளம் நடிகைகள் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்தது திரையுலகில் பெரும்ப் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகள் கடந்தாலும் இந்த இளம் நடிகைகளின் மரணத்திற்கான காரணம் வெளிவராமல் மர்மமாகவே இருக்கிறது. அந்த வகையில் இளம் வயதிலேயே மர்மமான முறையில் மரணமடைந்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நபீசா ஜோசப். கடந்த 2004-ம் ஆண்டு இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் மர்மமாண முறையில் இறந்து கிடந்தார். அப்போது அவருக்கு 26 வயது தான். அதிக மன அழுத்தத்தால் நபீசா தற்க்கொலை செய்து கொண்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். நபீசாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அவரின் மரணம் பல சந்தேகங்களை எழுப்பியது. ஆனால் அதற்கான விடை கிடைக்காததால், தற்போது வரை அவரின் மரணம் மர்மமாகவே தொடர்கிறது. 

38

பிரபல பாலிவுட் நடிகை குல்ஜீத் ரந்தாவா தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தனது 30-வது வயதில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். எனினும் இவரின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் இவரின் மரணமும் இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது.

48

பிரபல நடிகை விவேகா பாபாஜி தனது 37 வது வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் காதலன் தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரின் மரணம் தற்கொலை என்று முடித்து வைக்கப்பட்டது. 

58
Silk Smitha Bio Pic

Silk Smitha Bio Pic

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் தனது 35-வது வயதில் சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார். எனினும் இவரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. பல கோணங்களில் விசாரித்த பின்னர் போலீசாரும் அவரின் மரணத்தை தற்கொலை என்று முடிவு செய்தனர். 

68

பிரபல நடிகை திவ்ய பாரதி தனது 19 வயதில் வீட்டின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் இது தற்கொலை இல்லை கொலை என்று தெரிவித்தனர். ஆனால் கொலையாளி  யார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால் திவ்யாவின் மரணம் கொலையாகவே முடித்து வைக்கப்பட்டது. 

78

பாலிவுட் நடிகை ஜியா கான் 2013-ம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் திடீர் மரணம் பாலிவுட் சினிமாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜியா கானின் காதலன் சூரஜை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் இவரின் மரணம் தொடர்பான மர்மம் இன்றும் நீடித்து வருகிறது.  

 

88

2018 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. துபாயில் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அவர், துபாயில் உள்ள ஹோட்டல் குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved