ஆகஸ்டில் இருந்து டிசம்பருக்கு தாவிய அல்லு அர்ஜுன்; ஒரே அடியாக தள்ளிவைக்கப்பட்ட புஷ்பா 2 - புது ரிலீஸ் தேதி இதோ
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்டில் ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Allu Arjun
தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். அவரை பான் இந்தியா நடிகராக உயர்த்திய திரைப்படம் தான் புஷ்பா. கடந்த 2021-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இதில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் நடிகை சமந்தா, ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இப்படம் பான் இந்தியா அளவில் ஹிட் அடித்ததோடு ரூ.350 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
Allu Arjun, Rashmika
புஷ்பா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக பகத் பாசில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதையும் படியுங்கள்... Anitha Vijayakumar : வனிதாவின் அக்கா மகள்.. லண்டனில் நடந்த திருமண வைபோகம் - சொந்தங்களோடு வைப் செய்த அனிதா!
Pushpa 2
புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு வெளியானது. ஷூட்டிங் நிறைவடைந்தாலும், பின்னணி பணிகள் முடிய தாமதம் ஆவதால் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீஸ் ஆகாது என படக்குழு அறிவித்துள்ளது.
Pushpa 2 The Rule new Release Date
ஆகஸ்ட்டுக்கு பின் செப்டம்பரில் விஜய்யின் கோட், அக்டோபரில் ரஜினியின் வேட்டையன், நவம்பரில் அஜித்தின் விடாமுயற்சி என பிரம்மாண்ட படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்திருப்பதால், புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை ஒரே அடியாக டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துவிட்டது படக்குழு. அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 6-ந் தேதி புஷ்பா 2 படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகமும் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Actor Pugazh : இஸ்லாமிய சொந்தங்களே.. தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் - மனையோடு வந்து வாழ்த்து சொன்ன புகழ்!