Asianet News TamilAsianet News Tamil

தினமும் 'செக்ஸ்' வைத்தால் உடல் எடை அதிகரிக்குமா? பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் கவனம் தேவை!! 

திருமணத்திற்கு பின் தினமும் உடலுறவு வைப்பதால் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் என சொல்வது உண்மையா? அதன் பின்னணி என்ன என்பதை இங்கு காணலாம்.  

relationship tips is that true having sex everyday leads weight gain in tamil mks
Author
First Published Jun 24, 2024, 9:30 PM IST

பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உண்டு. அப்படி உடலுறவாலும் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும் என சொல்லப்படுவது உண்டு. சிலர் திருமணம் செய்வதற்கு முன்பு 40 முதல் 45 கிலோ வரை எடையை கொண்டிருப்பார்கள். ஆனால் திருமணமான பிறகு சட்டென 50 முதல் 60 கிலோ முறையே அவர்களின் எடை கிடுகிடுவென  ஏறிவிடும்.  இதற்கு திருமணத்திற்கு பிறகான உடலுறவு தான் காரணம் என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இது அறிவியல் ரீதியாக உண்மையா என்பது குறித்து இங்கு காண்போம்.

திருமணத்திற்கு பிறகான உடலுறவால் பெண்களுக்கு எடை அதிகரிப்பதற்கு எந்த அறிவியல்ரீதியான சான்றுகளும் இல்லை. அதனால் இது கட்டுக்கதையாக இருப்பதற்கான சாத்தியமே அதிகம். ஆனால் உடலுறவால் உடலமைப்பு மாறும் என்பது உண்மைதான். உடலுறவு கொள்வது நல்ல உடற்பயிற்சி. இதனால் நம் உடலில் கணிசமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. 

இதையும் படிங்க:  Foreplay Tips : தம்பதிகள் கட்டாயம் ட்ரை பண்ணி பார்க்க வேண்டிய 5 ஃபோர்ப்ளே டிப்ஸ்!!

உடலுறவினால் தான் உங்களுடைய எடை அதிகரிப்பதாக தோன்றினால் அந்த எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். அப்படி நடக்க வாய்ப்புகள் இல்லை.  எடை அதிகரிக்க பாலியல் ஹார்மோன்கள் காரணமாக இருக்கலாம். பாலியல் ஹார்மோன்கள் சமநிலையில் இல்லாவிட்டால் அது எடை அதிகமாக காரணமாகும். உடலுறவு வைப்பது நல்ல உடற்பயிற்சியாகும். இதனால் அதிகமான கலோரி செலவாகும். 

ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட மரபணு, உணவு பழக்கம், மன அழுத்தம், வாழ்க்கைமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உண்டு. பெண்களின் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் பாலியல் ஹார்மோன்களாகும். சில பெண்களுக்கு பிசிஓடி பிரச்சனையால் எடை கூடும். சிலருக்கு முன்கூட்டிய பெரிமெனோபாஸ் இருப்பதால் எடை அதிகரிக்கும். இது மாதிரி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதை தவிர்க்க சில வழிகளுண்டு.

இதையும் படிங்க:  அய்யோ.. ஆண்கள் செக்ஸ் வேண்டாம்னு சொல்ல இப்படியும் காரணங்கள் இருக்கா?

ஹார்மோன் சமநிலையின்மையினால் உங்களுக்கு எடை அதிகமானால், உணவு பழக்கத்தை மாற்றுங்கள்.  துரித உணவுகள், ஜங்க் புட், வறுத்த அல்லது பொரித்த உணவுகள் மற்றும் காரமான உணவுகளை குறைத்து உண்ணுங்கள். நல்ல தூக்கம் அவசியம். 7 முதல் 8 மணி வரை தூங்குங்கள். உங்களை மனரீதியான தொந்தரவுகள் பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். ஹார்மோன்களை சமநிலையாக வைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை கட்டாயமாக இருக்கவேண்டும். இதற்கு நல்ல உணவு பழக்கம், நல்ல உறக்கம், உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவற்றை செய்ய பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios