MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து.. மருத்துவ செலவுக்கு கூட கஷ்டப்படும் வடிவேலு பட காமெடி நடிகர் வெங்கல்ராவ்!

ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து.. மருத்துவ செலவுக்கு கூட கஷ்டப்படும் வடிவேலு பட காமெடி நடிகர் வெங்கல்ராவ்!

வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமான வெங்கல்ராவ் மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாக, வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்பவர்கள் நெஞ்சங்களை பதற வைத்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jun 24 2024, 10:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயினாக தங்களை நிலைநாட்டிக் கொள்வது எவ்வளவு கடினமான ஒன்ரோ... அதை விட கடினமானது தங்களை ஒரு குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும், காமெடி நடிகராகவும் ரசிகர்கள் மனதில் நிலைக்க வைப்பது. அதிலும் முன்னணி காமெடி நடிகர்கள் என்றால் அவர்களை விரல் விட்டு சொல்லி விடலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

செந்தில் - கவுண்டமணிக்கு பின்னர், ரசிகர்களை காமெடியால் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்தவர் வடிவேலு தான். ஆனால் இவருடன் காமெடி செய்யும் நடிகர்களை கூட இவர் தான் தேர்வு செய்வார். இவரின் அனுமதி இல்லாமல் அவர்கள் வேறு யார் படத்திலும் நடிக்க கூடாது, மீறி ஒருவேளை நடித்து விட்டால் அவர்களின் சோலி முடிந்துவிடும். அவர்களை வேறு எந்த ஒரு படத்திலும் கமிட் செய்ய கூடாது என கேகூறி அவர்களின் வயிற்று பிழைப்புக்கே உலை வைத்து விடுவார் என கூறுபவர்கள் பலர். ஆனால் இவர் முன்னணியின் இருந்த போது கூட காமெடியில் தன்னுடைய தனித்தன்மை மூலம் ஜொலித்தவர் விவேக் ஒருவரே.

Arun Vijay: பெட்டிக்கடையில் பார்த்த அந்த சின்னஞ்சிறு சிரித்த முகம்! விட மனமில்லாமல் பிடித்து கொண்ட அருண் விஜய்
 

35

அதே போல் சந்தானம், ஹீரோக்களுடன் கூட்டணி வைத்து முன்னணி இடத்தை பிடித்தார். வடிவேலு விஜயகாந்த் பற்றி சர்ச்சையாக பேசி சிக்கிய பின்னர் சூரி, யோகி பாபு, ரோபோ ஷங்கர், போன்ற காமெடி நடிகர்கள் வளர்ந்து வந்தனர். 

45

ஆனால் வடிவேலுவின் தயவால் காமெடி ரோலில் நடித்து... திறமை இருந்தும் காணாமல் போன பல காமெடி நடிகர்களில் ஒருவர் தான் வெங்கல்ராவ். இவர் வடிவேலுவுடன் இணைந்து, கந்தசாமி படத்தில் தேங்காய் பேரம் பேசும் காமெடியை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. சீனா தானா 007 படத்திலும் தலையில் இருந்து கையை எடுத்தால் கடித்துவிடும் மனநோயாளியாக நடித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

'லலிதாவின் பாட்டுக்கு பாட்டு' தொகுப்பாளர்... அப்துல் ஹமீதுக்கு என்ன ஆச்சு? ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வதந்தி!

55

இப்படி பல காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வாய்த்த இவர், இன்று தன்னுடைய சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என வேதனையோடு பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.  இவருக்கு ஏற்கனவே உடல்நல பாதிப்பு இருந்த நிலையில், சமீபத்தில் வெங்கல்ராவின், ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து, தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ செலவிற்கு நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப  கலைஞர்கள் தனக்கு உதவுமாறு பேச கூட முடியாத நிலையில் கேட்டுள்ளார். இவருக்கு கோலிவுட் பிரபலங்கள் உதவ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. அதிலும் வடிவேலு ஏதேனும் உதவுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
வடிவேலு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved