- Home
- Gallery
- மெகா ஹிட்டான மக்கள் செல்வனின் மகாராஜா..10 நாள் கழித்து வந்த பஞ்சாயத்து.. "கதை என்னோடது" - வருந்தும் பிரபலம்!
மெகா ஹிட்டான மக்கள் செல்வனின் மகாராஜா..10 நாள் கழித்து வந்த பஞ்சாயத்து.. "கதை என்னோடது" - வருந்தும் பிரபலம்!
Maharaja Movie : கடந்த ஜூன் 14ம் தேதி உலக அளவில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகாராஜா.

kurangu bommai
"குரங்கு பொம்மை" என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கி தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் நான் நித்திலன் சுவாமிநாதன். அவருடைய இயக்கத்தில் உருவான அடுத்த திரைப்படம் தான் மகாராஜா.
vijay sethupathi
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் 50வது திரைப்படமாக கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாகி, இன்று வரை திரையரங்குகளில் நல்ல வசூல் சாதனை புரிந்து வருகிறது மகாராஜா என்றால் அது இல்லை.
maharaja movie
உலக அளவில் மகாராஜா திரைப்படம் இதுவரை 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வரும் நிலையில், அந்த படத்தின் கதை மீது உரிமை கோரி புதிய சர்ச்சை ஒன்று எழுந்திருப்பது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
marimuthu
பழனியில் உள்ள சபரி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் நாகன் என்கின்ற மாரிமுத்து, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஜா திரைப்பட கதை தன்னுடையது என்று கூறியுள்ளார். மேலும் அதை பயன்படுத்தி இந்த படத்தை எடுத்துள்ளது தனக்கு வேதனை தருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.