Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2-வது திருமணமா? மாப்பிள்ளை இவர்தான்! தீயாய் பரவும் தகவல்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக... சமூக வலைத்தளத்தில் ஒரு வதந்தி தற்போது தீயாக வட்டமிட்டு வருகிறது. அது பற்றி விளக்கமாக இந்த செய்தியில் பார்ப்போம்.
Aishwarya Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, திருமணத்திற்கு முன்னர் சில காதல் சர்ச்சையில் சிக்கி மீண்டவர் என்றாலும்... கடந்த 2004-ஆம் ஆண்டு உருகி உருகி காதலித்து வந்த பிரபல நடிகர் தனுஷையே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதிக்கு, யாத்ரா, லிங்கா எங்கிற இரண்டு மகன்களும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய கணவர் தனுஷின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஐஸ்வர்யா, தனுஷை வைத்து '3' படத்தையும் இயக்கினார்.
குடும்பம், குழந்தை, தன்னுடைய ஆம்பிஷன் என எல்லா வற்றிலும் சமமாக கவனம் செலுத்தி வந்த ஐஸ்வர்யா, திடீர் என கடந்த ஆண்டு கணவர் தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழ்திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐஸ்வர்யா விவாகரத்து கோர காரணம்... தனுஷ் சில நடிகைகளிடம் நெருக்கம் காட்டியது என கூறப்பட்டது. எனினும் தனுஷ் வீட்டு தரப்பினர் மத்தியிலும் ரஜினி தரப்பிலும் இருந்து இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அணைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. லிங்கா - யாத்ரா இருவரும் தந்தையுடன் சில நாட்களும், தாயுடன் சில நாட்களும் மாறி மாறி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஐஸ்வர்யா சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்... ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 2-ஆவது திருமணம் குறித்த வதந்தி சமூக வலைத்தளத்தில் வட்டமிட துவங்கியுள்ளது.
ஐஸ்வர்யாவின் வீட்டில் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாகவே ... தற்போது விவாகரத்து பெறுவதில் ஐஸ்வர்யா அவசரம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதே போல் ஐஸ்வர்யா துணை இயக்குனர் ஒருவரோடு பழகி வருவதாக யாரோ கொளுத்தி போட... அது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இப்படி பரவி வரும் தகவலுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதால்... இது முழுக்க முழுக்க வதந்தியாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஸ்ரீதேவி முதல்... அமலா பால் வரை! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான முன்னணி தமிழ் நடிகைகள் இத்தனை பேரா?