MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிரபு மகளை இரண்டாவது திருமணம் செய்ய ஆதிக் போட்ட கண்டீஷன்? 500 கோடி வரதட்சிணை.. பிரபலம் கூறிய தகவல்!

பிரபு மகளை இரண்டாவது திருமணம் செய்ய ஆதிக் போட்ட கண்டீஷன்? 500 கோடி வரதட்சிணை.. பிரபலம் கூறிய தகவல்!

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில்.. திருமணத்திற்கு ஆதிக் ரவிச்சந்திரன் போட்ட கண்டிஷன் மற்றும் வரதட்சணை குறித்து செய்யாறு பாலு கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 19 2023, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Adhik Aishwarya wedding

Adhik Aishwarya wedding

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபுவின் தங்கை மகன் குணாலுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன குணால் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த நிலையில், திருமணம் ஆன கையோடு ஐஸ்வர்யாவும் அமெரிக்காவில் செட்டிலானார்.
 

26
Adhik Aishwarya wedding

Adhik Aishwarya wedding

திருமணமான சில வருடங்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, விவாகரத்து வரை சென்றது. இதைத் தொடர்ந்து குணாலை விட்டு பிரிந்து சென்னை வந்த ஐஸ்வர்யா, தன்னுடைய பெற்றோருடனே தங்கி விட்டார். அதே போல் தனக்கு விருப்பமான கேக் பேக்கிங் துறையை தேர்வு செய்து, பேக்கரி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Shruti Haasan:ஸ்ருதி ஹாசன் பற்றி அவரே சொன்ன உண்மை; அப்படி என்ன சொன்னாங்க பாருங்க!!
 

36
Adhik Aishwarya wedding

Adhik Aishwarya wedding

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவில் 'திரிஷா இல்ல நயன்தாரா' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு.. பின்னர் காதலாக மாறியது. கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் டிசம்பர் 15ஆம் தேதி நடந்து முடிந்தது.
 

46

ஐஸ்வர்யா, ஆதிக் ரவிச்சந்திரனை விட மூன்று வயது பெரியவர். இந்நிலையில் இந்த திருமணம் குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பலருக்கும் தெரியாத தகவல்களை கூறி வியக்க வைத்துள்ளார்.

Ethirneechal: அடேங்கப்பா.. இது தான் விஷயமா? கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் குழுவினர்! குவியும் வாழ்த்து!

56

இதுகுறித்து கூறுகையில்... பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள ஆதிக் ரவிச்சந்திரன் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டாராம். அதாவது தன்னுடைய மகளின் திருமணத்தை பிரபு மிகப்பெரிய மாநாடு போல நடத்த ஆசைப்பட்டாராம். ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பில் இருந்து இந்த திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என கூறி இருக்கின்றனர். அதனால் வழக்கத்தை விட பிரம்மாண்டத்தை குறைத்துக் கொண்டு இந்த திருமணம் எளிமையாக நடந்தாலும்... பிரபலங்களின் வருகை இந்த திருமணத்தை பேசக்கூடிய ஒன்றாக மாற்றிவிட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

66

அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்ட தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு , பிரபு தரப்பில் இருந்து 500 கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்திருக்கலாம் என செய்யாறு பாலு இந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

Priya Bhavani Shankar: அல்ட்ரா மாடர்ன் உடையில்.. பாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிரியா பவானி ஷங்கர்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved