முதல்வர் பதவிக்கு ஆசைப்படுபவர்... இப்படி கெட்டவார்த்தை பேசலாமா? லியோ டிரைலரால் சர்ச்சையில் சிக்கிய விஜய்!
லியோ பட டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வந்தாலும், அதில் நடிகர் விஜய் பேசியுள்ள கெட்ட வார்த்தைக்கு சோசியல் மீடியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
leo
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்துள்ளார். லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த லியோ படத்தின் டிரைலர் நேற்று மாலை ரிலீஸ் செய்யப்பட்டது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்த டிரைலர் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
leo vijay
இந்த டிரைலரிலேயே பல்வேறு டுவிஸ்டுகளை வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அதில் முக்கியமான ஒன்று விஜய்யின் இரட்டை வேடம். இதில் பார்த்தி, லியோ என இரட்டை கதாபாத்திரங்களாக விஜய்யின் கேரக்டர் காட்டப்படுவதால் விஜய் இப்படத்தில் டூயல் ரோலில் நடித்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல் இந்த டிரைலரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசும் ஒரு சர்ச்சைக்குரிய காட்சியும் இடம்பெற்றுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
leo Trailer
இந்த சீனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விஜய் போன்ற மாஸ் நடிகர் இப்படி கெட்ட வார்த்தை பேசி நடித்துள்ளது அவரை பாலோ பண்ணும் ரசிகர்களையும் அதுபோன்று பேசத் தூண்டும் என காமன் ஆடியன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜய்க்கு எக்கச்சக்கமான குழந்தை ரசிகர்களும் உள்ளதால் அவர்களை மனதில் வைத்து நடிகர் விஜய் இந்த டயலாக்கை பேசாமல் தவிர்த்திருக்கலாம்.
vijay bad words controversy
அதேபோல் விஜய்யை கெட்ட வார்த்தை பேச வைப்பதை லோகேஷ் கனகராஜ் ஒரு டிரெண்டாகவே மாற்றி வருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திலும் இண்டர்வல் சீனிலும் விஜய்யை கெட்ட வார்த்தை பேசி நடிக்க வைத்திருந்தார் லோகேஷ், தற்போது லியோவிலும் அதே டிரெண்டை பாலோ செய்துள்ளதால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் லோகேஷ்.
Netizens reaction
சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது உடலுக்கு கெடுதல் என்பதைப் போலத்தான் இந்த கெட்ட வார்த்தையும், இது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாதா? என அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. மறுபுறம் இந்த கெட்ட வார்த்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்கிற எதிர்ப்பு குரலும் எழுந்த வண்ணம் உள்ளது. அரசியலில் நுழைந்து முதல்வர் ஆக வேண்டும் என்கிற ஆசையோடு இருக்கும் விஜய் இப்படி கெட்ட வார்த்தை பேசி நடித்தால் அவருக்கு யார் வாக்களிப்பார்கள் என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இப்படி விஜய் பேசிய கெட்ட வார்த்தைக்கு எதிர்ப்புகள் குவிந்து வருவதால் இதனை படத்தில் இருந்து நீக்குவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... டேய் பூமர்ஸ்... சினிமா பைத்தியம் முத்திப்போச்சா! தியேட்டரை நொறுக்கிய விஜய் ரசிகர்களை விளாசிய ப்ளூ சட்டை மாறன்