நடிகர் விஷாலின் மேனஜர் கண் முன்னே நடந்த கோர சம்பவம்! பரிதாபமாக போன 4 உயிர்.!
கன்னியாகுமரி கடற்கரையில் குளிக்க சென்ற 8 பயிற்சி மாணவர்களில் 4 பேர் தங்களின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் குளிக்க சென்ற திருச்சி SRM மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் 8பேர் அடித்து சென்ற போது அருகில் இருந்த எங்களால் (என் தம்பி சரவணன், பாரத், ராஜா குடும்ப நண்பர்கள் அனைவரும்) முடிந்தவரை 4பேரை கரைக்கு கொண்டு வந்தோம் அதில் ஒருவர் மட்டும் கரை சேர்த்தும் அவர் இறந்து விட்டார் என்று கனத்த இதயத்துடன் நடிகர் விஷால் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் கூறியுள்ளார்..
மேலும் தொடர்ந்து பேசிய அவர், மற்ற 4பேரில் ஒரு பெண் பல மணி நேரம் போராடினால் அவளுடைய போராட்டமும் எங்களுடைய போராட்டமும் பயணளிக்கவில்லை நாங்கள் முயற்சி செய்தும் கண்ணெதிரே காப்பாத்த முடியாமல் 4பேரும் இறந்தார்கள் இதயம் கனக்கிறது. எங்களால் முடிந்த வரை 3பேரை காப்பாற்ற முடிந்தது அரசு அதிகாரிகள் கை கொடுத்திருந்தால் அனைவரையும் காப்பாத்திருப்போம். இதற்கு அப்போது நாங்கள் தொடர்புகொண்ட அவசர சேவை மீட்பு பணி அனைவரும் நிராகரித்தார்கள். வந்த காவல்துறையும் கைவிட்டார்கள் மக்களை காப்பாற்றும் அரசும் கட்டமைப்பும் ஊனமாக இருக்கிறது இதயம் கனக்கிறது.
சுற்றுலா பயன்பாட்டிற்கு என்று இருந்தும் எந்த ஒரு அபாய அறிவிப்பு பலகையும் இல்லை, கடலோர பாதுகாப்பு படையும் இல்லை, மீட்பு பணி குழுவும் இல்லை இதுவரை அப் பகுதியில் 40க்கும் மேல் கடலலை இழுத்து சென்று 15பேருக்கு மேல் இறந்துள்ளார்கள் என்பது வருத்தமாக உள்ளது. மக்களை பாதுகாக்கும் மேற்கொண்ட எந்த பணியும் செயல்படுத்தவில்லை என்பது வருத்தமாக உள்ளது.
திரைப்படத்தில் தான் பார்த்திருக்கிறோம் இறுதியில் முடிந்த உடன் அனைவரும் வருவது அதே போல் இதிலும் காவல்துறை அதிகாரிகள், RDO அதிகாரி, உயர் அதிகாரிகள், தீயணைப்பு படை வீரர்கள் அனைவரும் வந்தும் எந்த பயனும் இல்லை. என தெரிவித்துள்ளனர்.