டேய் பூமர்ஸ்... சினிமா பைத்தியம் முத்திப்போச்சா! தியேட்டரை நொறுக்கிய விஜய் ரசிகர்களை விளாசிய ப்ளூ சட்டை மாறன்
லியோ டிரைலர் திரையிட்ட தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் செய்த செயல்களை லிஸ்ட் போட்டு விளாசி உள்ளார் யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
லியோ பட டிரைலர் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், அதனை ஒளிபரப்பிய தியேட்டர்களின் நிலவரம் குறித்து சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக கடுமையாக சாடியுள்ளார். சென்னை ரோகிணி தியேட்டரில் இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டது முதல் திருப்பூர் சுப்ரமணியனின் தியேட்டரில் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம் கூடியது வரை அனைத்தையும் விளாசி உள்ளார் ப்ளூ சட்டை.
ரோகிணி தியேட்டர் சம்பவத்தை சுட்டிக்காட்டி ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவில், 'படத்தை படமா பாப்போம். அதுல கஞ்சா அடிச்சா நாங்களும் கஞ்சா அடிக்க மாட்டோம். அதுல கொலை பண்ணா நாங்ளும் பண்ண மாட்டோம்'னு 90s and 2K பூமர்ஸ் சொல்றாங்க. ஆனா ரெண்டரை நிமிச ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத உங்களோட இந்த ஒழுக்க கேடை, சினிமா வெறியை, எல்லை மீறி ஹீரோக்களுக்கு காவடி தூக்கற காமடியை பாத்து மொத்த தமிழர்களும், இதர மாநில மக்களும் சிரிப்பா சிரிக்கறாங்க.
இதுல ரெண்டரை மணிநேர படம் பாத்துட்டு கெட்டுப்போகாம ஒழுங்கா இருப்பாங்களாம். செம காமடிடா!! இப்படி பெரிய பொருட்சேதம் உண்டாக்குற அளவுக்கு சினிமா பைத்தியம் முத்திப்போன உங்களுக்கு வீட்லயும், ஸ்கூல், காலேஜ், வேலை செய்ற எடத்துல ஒருத்தரும் புத்தி சொல்ல மாட்டாங்களா? எல்லாரும் சொல்லியும் மண்டைல ஏறலையா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதேபோல் திருப்பூரில் நடந்த சம்பவத்தை சாடும் விதமாக ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள மற்றொரு பதிவில், “ட்ரைலரை மொபைலில் பார்க்காமல் இப்படி கேவலமாக அடித்து பிடித்து ஓடும் இந்த 90s and 2K பூமர்கள் தமிழகத்தின் அவமான சின்னங்கள். ஒவ்வொரு சினிமா நடிகனுக்கும் எந்த தகுதியும் இல்லாமல் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆகும் ஆசை வர இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் கூட்டம்தான் காரணம். கேரளாவில் மோகன்லால், மம்முட்டி, ஃபஹத் உள்ளிட்ட எந்த முன்னணி நடிகரும் கட்சி ஆரம்பித்து முதல்வராக ஆசைப்படுவதில்லை.
அப்படி செய்தாலும், அம்மாநில மக்கள் இவர்களை தோற்கடிப்பார்கள். சினிமாக்காரன் படத்தில் மட்டும் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனும் தெளிவு அந்த மக்களுக்கு உண்டு. இங்கே எந்த சுய அறிவும் இல்லாத இப்படியான கூட்டம் உள்ளவரை ஏகப்பட்ட ஹீரோக்கள் முதலமைச்சர் கனவுடன் கட்சி ஆரம்பிப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக திருப்பூர் சுப்ரமணியனின் தியேட்டரை சுட்டிக்காட்டி ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளதாவது : “திருப்பூர் சுப்ரமணி சார் இது உங்க திருப்பூர் சக்தி சினிமாஸ் தியேட்டர்னு சொல்றாங்க? உண்மையா? தைரியம் இருந்தா பதில் சொல்லுங்க பாப்போம். ரசிக வெறித்தனத்தை இப்படி கிளப்பிவிட்டு பணம் பண்றது அவமானம் இல்லையா? வயசுக்கேத்த பக்குவம் இன்னுமா உங்கள மாதிரி தியேட்டர் முதலாளிகளுக்கு வரலன்னு தமிழக மக்கள் கேக்கறாங்க.
எப்பதான் சார் நீங்க திருந்துவீங்க? லியோ முதல் மூணு அல்லது ஐந்துநாள் ஷோ டிக்கட் எல்லாம் கவுண்ட்டர் ரேட்ல விப்பீங்களா? இல்லன்னா 2,000, 5,000 ரூவான்னு போகுமா? இதுல எனக்கு அட்வைஸ் பண்ணி யூட்யூப் சேனல்களுக்கு கம்பீரமா பேட்டி வேற தர்றீங்க. வெரி ஃபன்னி ஐயா. வெரி ஃபன்னி!!” என சரமாரியாக விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை.
இதையும் படியுங்கள்... Leo Trailer: லியோ ட்ரைலர் போட்டது ஒரு குத்தமா? ரோகிணி திரையரங்கை பந்தாடிய தளபதி விஜய் ரசிகர்கள்!