குட் நைட் இயக்குனருக்கு கல்யாணம்.. வாழ்த்தி செயின் போட்ட மாஸ் நடிகர்.. அப்போ கூட்டணி உறுதியா? New Update!
Vinayak Chandrasekaran : நடிகர் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
Vinayak Marriage
பிரபல நடிகர் மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் "குட் நைட்". இந்த திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்றவர் தான் அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.
Vinayak
நேற்று அவருக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், குட் நைட் பட குழுவினர் அனைவரும் நேரில் வந்து அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர். திரைத்துறையை சார்ந்த பல்வேறு பிரபலங்களும் அவருடைய திருமணத்தில் பங்கேற்று தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Siva
இந்த சூழலில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், விநாயகர் சந்திரசேகரனின் திருமணத்திற்கு நேரில் வந்து தம்பதியர்களுக்கு வாழ்த்துக்களை கூறியதோடு தங்கள் சங்கிலி ஒன்றியம் அவருக்கு பரிசளித்துள்ளார்.
Sivakarthikeyan
ஏற்கனவே விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது இந்த வெற்றி கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டார செய்திகள் கூறுகின்றன.