MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Simbu: 40 வயதில் காதலில் விழுந்த நடிகர் சிம்பு? இவங்க தான் காதலியா! வெளிநாட்டில் எடுத்த புகைப்படம் வைரல்!

Simbu: 40 வயதில் காதலில் விழுந்த நடிகர் சிம்பு? இவங்க தான் காதலியா! வெளிநாட்டில் எடுத்த புகைப்படம் வைரல்!

நடிகர் சிம்பு சைலண்டாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது இவர் காதலித்து வருகிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம். 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 02 2023, 09:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் திரையுலகில்... இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர் என... பன்முக திறமையாளராக அறியப்படும் டி.ராஜேந்தரின் மூத்த மகன் தான் சிம்பு. தன்னுடைய தந்தை இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். 
 

26
simbu

simbu

இதைத்தொடர்ந்து, கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். பின்னர் இவர் நடிப்பில் வெளியான தம், அலை, குத்து, கோவில், மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன் என வரிசையாக படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் பல இளம் ரசிகைகளின் கனவு கண்ணனாவும் வலம் வந்தார் சிம்பு.

Bigg Boss Elimination: இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ஜோவிகாவா? விக்ரமா... வெளியான கன்ஃபாம் தகவல்!
 

36
simbu

simbu

சிம்பு எந்த அளவுக்கு பிரபலமோ அதே அளவு சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாதவர். ஹீரோவாக அறிமுகமாகும் போதே... உச்ச நடிகரின் மகளை காதலித்து வந்தார். பின்னர் அந்த காதல் பிரேக்கப்பில் முடிய, வல்லவன் படத்தில் நடித்த போது... நயன்தாராவை காதல் வலையில் வீழ்த்தி, பின்னர் சில அந்தரங்க புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இந்த காதலும் பாதியிலேயே முறிந்தது.
 

46

இதை தொடர்ந்து வாலு படத்தில் நடிக்கும் போது ஹன்சிகாவுடன் சிம்புவுக்கு காதல் ஏற்பட.. அதுவும் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. அடுத்தடுத்த காதல் தோல்வி மற்றும் பல்வேறு சர்ச்சைகளால், சில வருடம் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்த சிம்பு... உடல் எடையை குறைத்து, நடித்த மாநாடு திரைப்படம் மீண்டும் சிம்புவின் கேரியரை தூக்கி நிறுத்தியது. இதை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

Annapoorani Day 1 Collection: நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

56

கடைசியாக சிம்பு நடித்த பத்து தல படத்தில் மீண்டும் உடல் எடையை ஏற்றி நடித்திருந்த நிலையில், தற்போது ஏற்றிய எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிம்புவின் 48-ஆவது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 

66

இந்நிலையில் நடிகர் சிம்பு காதலிக்கிறாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது, சிம்பு இளம்பெண் ஒருவருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் . இந்த லேட்டஸ்ட் புகைப்படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. எப்போது சிம்பு திருமணம் செய்து கொள்வார் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் ரசிகர்களுக்கு அடுத்த வருடத்திலாவது திருமணம் குறித்த குட் நியூஸ் சொல்லுவாரா சிம்பு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிலம்பரசன்
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved