MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • செம்ம கியூட்... இரண்டாவது குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் கூறிய கணேஷ் வெங்கட்ராம்! குவியும் வாழ்த்து!

செம்ம கியூட்... இரண்டாவது குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் கூறிய கணேஷ் வெங்கட்ராம்! குவியும் வாழ்த்து!

பிரபல நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான, கணேஷ் வெங்கட்ராமின் மனைவியும், நடிகையுமான நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்து தகவலை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 03 2023, 08:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ganesh venkatram and Nisha Couples

Ganesh venkatram and Nisha Couples

சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்', சீரியல் மூலம் அறிமுகமாகி பின்னர் முத்தாரம், ஆபீஸ், தெய்வமகள், நெஞ்சம் மறப்பதில்லை, போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்த பிரபலமானவர் நிஷா. இவர் பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Nisha baby shower

Nisha baby shower

இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே சமைரா என்கிற பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், நிஷா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இந்த தகவலை சில மாதங்களுக்கு முன், அவர் வெளியிட்ட நிலையில், மனைவிக்கு எளிமையான முறையில் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் கணேஷ் வெங்கட்ராம். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

38 வருடங்களுக்கு பின்னர் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் முன்னணி நடிகர்! அட இவரும் இருக்காரா?
 

34
Nisha 2nd time Pregnant:

Nisha 2nd time Pregnant:

சமீபத்தில் கூட கணேஷ் வெங்கட்ராம், போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, "நிஷாவிடம் எப்போதும் நகைச்சுவையாக சொல்வேன். நானும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று. மனதளவில் என் மகிழ்ச்சியையும், உணர்வுகளையும், வெளிப்படுத்த தான் அப்படி சொல்வேன். எங்கள் மகள் சமைரா பிறக்கும்போது என்ன உணர்வு இருந்ததோ, அதை உணர்வு இன்னும் துளி கூட மாறவில்லை. நிஷா மீதுள்ள அன்பு, அக்கறை, அப்படியே உள்ளது என தெரிவித்திருந்தார்". இவரது பதிவுக்கு ரசிகர்களும் தங்களுடைய கருத்தை கூறி வந்தனர்தெரிவித்து வந்தனர்.

44
Ganesh Venkatram Blessed Boy Baby

Ganesh Venkatram Blessed Boy Baby

இதைத்தொடர்ந்து நிஷா - கணேஷ் வெங்கட்ராம் ஜோடிக்கு, அழகிய ஆண் குழந்தை இன்று காலை பிறந்த தகவலை, கணேஷ் வெங்கட்ராம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். தாய் மற்றும் சேய் இருவரும் நலமாக உள்ளதாகவும், அனைவருடைய அன்பும், ஆசீர்வாதமும் என்றென்றும் எங்களுக்கு தேவை என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை கணேஷ் - நிஷா ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved