Cool Suresh: 'சரக்கு' பட விழாவில் தொகுப்பாளரிடம் அத்து மீறிய கூல் சுரேஷ்! கண்டித்த பத்திரிக்கையாளர்கள்!
'சரக்கு' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட கூல் சுரேஷ் முகம் சுழிக்கும் விதத்தில் தொகுப்பாளினியிடம் நடந்து கொண்டதற்கு, பத்திரிக்கையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களுடைய கண்டனங்களை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலமாகவே, திரைப்படங்களுக்கு புரமோஷன் தேடித் தருகிறேன் என்கிற பெயரில், ஆடியோ லான்ச் மற்றும் திரைப்படங்கள் ரிலீசாகும் போது முதல் ஆளாக தியேட்டரிலும், நிகழ்ச்சி நடக்கும் இடத்திலும் ஆஜராகி விடுகிறார் கூல் சுரேஷ். அந்த வகையில் நேற்று மன்சூர் அலிகான் நடித்துள்ள, 'சரக்கு' படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்ட விழா பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அங்கு வந்த கூல் சுரேஷ், வழக்கம்போல் சம்மந்தம் சம்மந்தம்.. இல்லாமல் பேசியது மட்டுமின்றி, முகம் சுழிக்கும் விதத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா கழுத்தில் மாலை போட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த மாலையை தொகுப்பாளினி கீழே தள்ளிவிட்டு, தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். கூல் சுரேஷின் இந்த செயலுக்கு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினர் உட்பட அனைவரும் தங்களுடைய கண்டனத்தை தெரிவிக்க பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு, மேடையை விட்டு இறங்கினார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர், வில்லன், காமெடியன் போன்ற கதாபாத்திரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் தான் கூல் சுரேஷ். சமீப காலமாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால், youtube ஒன்றை துவங்கி அதில் படத்தின் ரிவ்யூ மற்றும் இதுபோல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இதனை அவருடைய பிரமோஷன் ஆகவும் அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் "குடி குடியை கெடுக்கும்" என்கிற பழமொழிக்கேற்ப குடி மிகவும் ஆபத்தான ஒன்று, என்பதை தெரிவிக்கும் விதத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் 'சரக்கு' இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கி உள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னை பிரசாத் லேபிள் நடந்தபோது தான் இந்த கூத்தும் அரங்கேறி உள்ளது.
கழுத்தில் ஒரு ரோஜா மாலையுடனும், கையில் ஒரு மாலையுடனும் மேடைக்கு வந்த கூல் சுரேஷ், மேடையில் உள்ள அனைவருக்கும் மாலை போடீங்க... ஒருத்தருக்கு மாலை போட்டீங்களா? என கேட்டுவிட்டு, வெடுக்கென தொகுப்பாளினி ஐஸ்வர்யா கழுத்தில் மாலை போட்டார். இதை சற்றும் எதிர்பாராத அவர் மாலையை கழட்டி கீழே தள்ளி விட்டு, அவருடைய கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும் கூல் சுரேஷின் செயலைக் கண்டு அங்கிருந்த பலரும் முகம் சுழித்தனர்.
மன்சூர் அலிகான் இதெல்லாம் தப்பு டா என கூறி கண்டித்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் சிலர் மன்சூர் அலிகானிடம் கூல் சுரேஷின் அநாகரிக செயல் குறித்து, அவரிடம் கேட்டபோது நான் முன்பே அவரை கண்டித்து விட்டேன். எனினும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைக்கிறேன் என கூறி, கூல் சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்தார். இவரின் இந்த செயல் தற்போது திரையுலக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.