மீண்டும் குணசேகரன் வருவான் ஆனா.. அதிர்ச்சி கொடுத்த அப்பத்தா! வில்லியாக மாறிய விசாலாட்சி! எதிர்நீச்சல் அப்டேட்!
'எதிர்நீச்சல்' சீரியல், மாரிமுத்து இறப்புக்கு பின்னர் புதிய கோணத்தில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி, அப்பத்தா கூறுவது தன இன்றைய புரோமோவில் வெளியாகி உள்ளது.
Sun TV Ethirneechal
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியல் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தது. தொடர்ந்து TRP-யில் முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள எதிர்நீச்சல் சீரியலில், ஆணி வேராக பார்க்கப்பட்ட ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மாரிமுத்து செப்டம்பர் 8-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு பின்னர் ஆதி குணசேகரன் என்கிற வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிப்பது யார்? என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.
Gunasekaran Shocking Letter
வேல ராமமூர்த்தி, பசுபதி, ராதாரவி, போன்ற சில நடிகர்களிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை யார்? இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சீரியலின் கதைக்களமும் புதிய கோணத்தில் நகர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் குணசேகரன் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டே வெளியேறி விட்டதாக, இடம்பெற்ற காட்சிகள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Ethirneechal Gunasekaran
தன்னுடைய அண்ணன் எங்கே சென்று விட்டார் என ஞானமும், கதிரும் தங்களுக்கு தெரிந்த வட்டாரங்களில் போன் செய்து பரிதவிப்போது விசாரித்து வந்தனர். அப்போது ஆடிட்டர் கூறிய தகவல் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே ஒருமுறை குணசேகரன் இதுபோல் வீட்டை விட்டு வெளியேறி டிராமா செய்துள்ளதால், நந்தினி, ரேணுகா, ஜனனி ,ஆகியோர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஞானம், கதிர், கரிகாலன் ஆகியோர் கதறி அழுதனர். குறிப்பாக கரிகாலன் எங்கய்யா போன? என மாரிமுத்துவின் நினைத்து நிஜமாகவே அழுதது போன்ற உணர்வு பூர்வமான காட்சிகள் இடம்பெற்றது.
Appatha broken the suspense
எனவே இனி ஆதி குணசேகரின் காட்சிகள் இடம்பெறாதா? என ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு பதில் கொடுக்கும் விதமாகவே இன்றைய ப்ரோமோ அமைந்துள்ளது. "குணசேகரனின் கடிதத்தை அப்பத்தா பார்த்துக் கொண்டிருக்க, ஜான்சி ராணி வீட்டில் உள்ளே வருகிறார். பின்னர் நந்தினி இதை என்ன புதுசா வா பண்றாரு, இந்த டிராமாவை தான் அடிக்கடி பண்றாரே என அப்பத்தாவிடம் கூற, இதற்கு அப்பத்தான் இந்த முறையும் குணசேகரன் திரும்ப வருவான். ஆனால் வரப்போற குணசேகரன் ரொம்ப ஆபத்தானவனா வரப் போறான்!! என ரசிகர்களுக்கு இருந்த சந்தேகத்திற்கான பதிலை வெளிப்படுத்தியுள்ளார்.
Visalatchi against 4 daughter in laws
பின்னர் ஜான்சி ராணியை, விசாலாட்சி இங்கேயே இருக்கட்டும் என கூற... நந்தினி கண்டதை எல்லாம் வீட்டுக்குள்ள தங்க வைப்பீங்களா என கேட்கிறார். அதற்கு விசாலாட்சி கோவமாக கண்டவளுங்க கூட கூத்தடிச்சு தான், இன்னைக்கு என் பிள்ளை தொலைச்சிட்டு நிற்கிறேன் என கூறுகிறார். இவருடைய பதில் இத்தனை நாள் தங்களுக்கு ஆதரவாக தன்னுடைய மாமியார் இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த ஜனனி, ரேணுகா, நந்தினி, ஆகியோருக்கு பேரிடியாக அமைகிறது. மேலும் இனி வரும் நாட்களில் விசாலாட்சி மருமகள்களுக்கு எதிராக வில்லியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.