காப்பி சர்ச்சையில் சிக்கிய ஜெயம் ரவியின் 'பிரதர்' ஃபர்ஸ்ட் லுக்! அப்படியே இருக்கே.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
ஜெயம் ரவியின் 30-ஆவது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில், அந்த போஸ்டர் அப்படியே கொரியன் சீரிஸின் காப்பி என ஆதாரத்துடன் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Jayam Ravi Movie:
'பொன்னியின் செல்வன்' வெற்றி, ஜெயம் ரவிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்து தரமான கதையை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில், ஜெயம் ரவி தனது 30வது படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும், நிலையில்... நேற்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
Jayam ravi 30th Movie
'பிரதர்' என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில். ஜெயம் ரவி மிகவும் ஸ்டைலிஷ் லுக்கில் ட்ராபிக் நிறைந்த இடத்தில் ஒரு காலும்... பசுமையான செடி, மலைகள் நிறைந்த இடத்தில் ஒரு காலும் வைத்திருப்பது போல், இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
Brother movie Cast
மேலும் இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பூமிகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் 'பிரதர்' படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார்.
Bother movie Digital and satellite Rights sold:
விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி, மற்றும் மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இந்த படத்தின் பணிகள் முடிவதற்கு முன்பு இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை விற்பனை ஆகிவிட்டதாக கூறப்பட்டது.
Brother Copy cat
இது ஒருபுறம் இருக்க, தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே... காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தின் போஸ்டரை, கொரியன் சீரிஸானா... பிரீட் ஆப் டெஸ்டினி (BreathOfDestiny) என்கிற போஸ்டரில் இருந்து காப்பி நடித்துள்ளதாக, இரண்டு போஸ்டர்களையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இந்த போஸ்டரும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.