Meera Letter: விஜய் ஆண்டனி மகள் தற்கொலை பற்றி வெளியான புதிய தகவல்! பாட புத்தகத்தில் சிக்கிய உருக்கமான கடிதம்!
நடிகர் விஜய் ஆண்டனி மகளின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவருடைய மரணம் குறித்து சில புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Vijay antony :
இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர், என தமிழ் சினிமாவில் பன்முக திறமையாளராக விளங்கும் விஜய் ஆண்டனிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து தன்னுடைய திறமையால் உயர்ந்த விஜய் ஆண்டனி, அனைவரிடமும் மிகவும் அன்பாக பேசக்கூடிய, பழகக் கூடிய ஒரு நபர். திரையுலகில் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத நபராகவும் இருந்து வருகிறார்.
Vijay Antony Debut:
விஜய் ஆண்டனி 'சுக்கிரன்' என்கிற படத்தின் மூலம், 2005 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில், பின்னர் 'நான்' என்கிற படத்தில் ஹீரோவாக தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார். திரை உலகில் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் இருக்கும் போதே, தன்னுடைய காதலியான பாத்திமா என்பவரை 2006 ஆம் ஆண்டு கரம் பிடித்தார். இவர்களுக்கு 2007 பிறந்தவர் தான் மீரா பிறந்தார்.
Vijay Antony Wife Fathima:
பாத்திமா தொலைக்காட்சி ஒன்றில், தொகுப்பாளராக பணியாற்றியபோது, பேட்டி ஒன்றிற்காக விஜய் ஆண்டனியை சந்திக்க நேர்ந்த போது, இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறி திருமணத்திலும் முடிந்தது. தன்னுடைய காதல் வாழ்க்கையில் வெற்றி கண்ட விஜய் ஆண்டனிக்கு, காதலின் அடையாளமாக 2007-ஆம் ஆண்டு பிறந்த முதல் குழந்தை தான் மீரா.
Vijay Antony Daughter Meera:
மீரா கடந்த ஓர் ஆண்டாகவே மன அழுத்தத்தால், பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டறிந்த அவருடைய பெற்றோர் காவேரி மருத்துவமனை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளனர். 16 வயதே ஆகும் மீரா தற்போது சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பிலும் படு சுட்டி என கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனி மகள் இறப்பில் அடையாளம் தெரிந்தது!! பிரேத பரிசோதனை ரிப்போர்ட்... உறுதி செய்த போலீஸ்!
Vijay Antony Daughter Death:
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில், அவரது தந்தையின் படுக்கையறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை விஜய் ஆண்டனியின் வீட்டில் வேலை செய்யும் நபர் முதலில் பார்த்து, பின்னர் சத்தம் போட்டு மற்றவர்களை அழைத்துள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் விஜய் ஆண்டனியின் மனைவி ஆகியோர் தூக்கில் தொங்கிய தங்களுடைய மகளை பார்த்து நிலைகுலைந்து கதறி அழுத நிலையில், உடனடியாக அவரை தூக்கில் இருந்து இறக்கி, காவிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்... ஏற்கனவே மீரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக, போலீசாரும் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மீராவின் பள்ளி, அவரின் நண்பர்கள் அவர் பயன்படுத்திய, லாப்டாப் முதற்கொண்டு அனைத்துமே சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.
Laptop Closed 11'o Clock:
இந்நிலையில் தற்போது மீராவின் தற்கொலை குறித்து, விசாரணையில் வெளிவந்துள்ள புதிய தகவலில்... இரவு 11 மணி வரை, மீரா தன்னுடைய லேப்டாப்பில் பயன்படுத்தி கொண்டிருந்ததாகவும் அதன் பின்னரே அதிகாலையில் தூக்கில் தொங்கிய தகவல் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை!! தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்!
Meena Sensational Letter Found:
அதே போல் அவருடைய பாடப்புத்தகத்தில் உருக்கமான ஒரு கடிதம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், "எனது நண்பர்கள் ஆசிரியர்களை மிஸ் செய்வேன். எல்லோரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் லவ் யூ ஆல்!! தேங்க்யூ ஆல்!! என அவர் எழுதி வைத்துள்ளதாக தடவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது".