ஒரு சொட்டு தண்ணீர் கூட விஜய் ஆண்டனி குடிக்கவில்லை!! இப்படி அவர் தவிப்பதை பார்க்க முடியல பிரபலத்தின் பதிவு!
மகள் மறைவுக்கு பின்னர்... விஜய் ஆண்டனி பல மணி நேரமாக, ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை என பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் X தளத்தில் போட்டுள்ள பதிவு, ரசிகர்கள் மனதை கலங்க வைத்துள்ளது.
Vijay Antony
தமிழில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'சுக்கிரன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன்னுடைய கலைப் பணியை துவங்கியவர் விஜய் ஆண்டனி. பின்னர் 'நான்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இருந்தே... தன்னுடைய வெற்றி இலக்கை மட்டுமே குறிக்கோளாக வைத்து நடிப்பு, இசை,படத்தொகுப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்த நிலையில் அதில் வெற்றியும் கண்டார்.
Vijay Antony Family
விஜய் ஆண்டனி கடந்த 2006 ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு மீரா, லாரா, என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் லாராவும் அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
Vijay antony Daughter Meera Suicide
இந்நிலையில் மீரா கடந்த ஓராண்டாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதற்காக காவேரி மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில், தன்னுடைய தந்தையின் அறையில் மீரா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிரசெய்தது. தற்கொலைக்கு எதிராக பல கருத்துக்களை விஜய் ஆண்டனி பேசியுள்ள நிலையில், அவருடைய மகளே இது போல் ஒரு முடிவு எடுத்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.
Celebrities Condolence
மேலும் விஜய் ஆண்டனி மகள் மீரா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் அவருடைய வீட்டில் குவிந்தனர். தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கு தங்களுடைய ஆறுதல்களையும் தெரிவித்து வருகிறார்கள்
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மனநிலை தற்போது எப்படி இருக்கிறது? என பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயனிடம் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவர் பதில் அளித்துள்ளதாவது... "விஜய் ஆண்டனி பல மணி நேரமாக ஒரு துளி கூட தண்ணீர் குடிக்கவில்லை, அவரை இப்படி பார்க்க முடியவில்லை என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது."