MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • “வார்த்தைகளால் சொல்ல முடியாது.. இதுக்கு கீர்த்தி தான் காரணம்..” அசோக் செல்வனின் தாய் நெகிழ்ச்சி..

“வார்த்தைகளால் சொல்ல முடியாது.. இதுக்கு கீர்த்தி தான் காரணம்..” அசோக் செல்வனின் தாய் நெகிழ்ச்சி..

நடிகர் அசோக் செல்வன் தனது தாய்க்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். இதுகுறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் அவரின் தாய் மலர் செல்வம்..

2 Min read
Author : Ramya s
| Updated : Mar 02 2024, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அசோக் செல்வன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே படங்களின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் நித்தம் ஒரு வானம், போர் தொழில் போன்ற படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

28

சமீபத்தில் வெளியான சபாநாயகன், ப்ளூ ஸ்டார் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இதனிடையெ ப்ளூ ஸ்டார் படத்தில் தன்னுடன் நடித்த கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி அவ்வப்பொது தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

38

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் தனது தாய்க்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். இதனால் மகிழ்ச்சியிலும், பூரிப்பிலும் உள்ள அசோக் செல்வனின் அம்மா மலர் செல்வம் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

48

அப்போது பேசிய அவர் “ அசோக் செல்வன் எப்போதுமே அப்பா அம்மாவை மகிழ்விக்கும் பிள்ளையாகவே இருந்திருக்கான். அவன் சினிமாவில் எண்ட்ரி ஆன தொடக்க காலத்தில் ஒரு படத்துக்கு கிடைத்த ரூ.1 லட்சம் அட்வான்ஸ் பணத்தில் கூட அவனுக்கென எதுவும் வாங்கிக்கொள்ளாமல் எங்களுக்கு தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்கிக்கொடுத்தான். எனக்கு 12,000 ரூபாய்க்கு பட்டுப்புடவை, ஜிமிக்கி வாங்கிக்கொடுத்தான்.

58

அசோக் செல்வன் இப்பொது பேர் சொல்லும் ஹீரோவாகிட்டான். ஆனால் அப்பா அம்மா மேல இருந்த பாசமும், மரியாதையும் குறையவே இல்ல. மேலும் இப்ப மருமகல் கீர்த்தியோட அன்பும் சேர்ந்து கிடைக்கிறதால ரொம்ப சந்தோஷம். 
சென்னை மழையில் மெக்கானிக் செட்டில் இருந்த எங்கள் கார் முழுமையா வெள்ளத்தில் மூழ்கிடுச்சு. பழுது பார்த்தாலும் பழைய மாதிரி சரியா போகல. ஆனால் நாங்க சிரமப்படக்கூடாது அசோக் செல்வன் இப்ப என் கணவருக்கு பிடிச்ச டொயோட்டா ஹைக்ராக்ஸ் ஹைப்ரிட் காரை வாங்கி கொடுத்துருக்கான். 

68

இந்த கார் வாங்கணும்னு கணவர் ரொம்பநாளா சொல்லிட்டே இருந்தார். இப்போ என் மகளும், மருமகளும் கணவரின் கனவை நிறைவேற்றிவிட்டார்கள். அந்த காரிலேயே ஒரு ஆச்சர்யம் இருந்துச்சு. எங்களுக்கு திருமணமான ஆண்டு 1986. அந்த ஆண்டை குறிக்கும் வகையில் BF 1986 என நம்பர் பிளேட் வாங்கி கொடுத்து எங்கள் இன்னும் சந்தோஷத்துல திக்குமுக்காட வச்சுட்டான். இதுக்கு எங்க மருமக கீர்த்தி தான் காரணம். ரொம்ப முயற்சி எடுத்து இந்த நம்பர் பிளேட்டை வாங்கிக்கொடுத்துருக்காங்க கீர்த்தி.

78

நம்பர் பிளேட்டில் வரும் Best Friends என்று அர்த்தம். கணவன் மனைவியா இருந்தாலும் நானும் அவரும், நல்ல புரிதலும் நண்பர்களாக தான் வாழ்க்கையை கொண்டு போயிட்டு இருக்கோம். அசோக்கும் கீர்த்தியும் ஒருவரை ஒருவர் சமமா மதிச்சு நண்பர்களாக வாழ்க்கையை நடத்திட்டு இருக்காங்க. எங்களுக்கு அதுல பெருமைதான். சம்பாதிக்க தொடங்கிய உடனே அசோக் செல்வன் எங்களுக்கு பாத்து பாத்து செஞ்சுட்டு இருக்கான்.

88

புது காரை வீட்டு முன்னாடி க்கொண்டு சர்ப்ரைஸா நிறுத்துன சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அந்த காரின் விலை ரூ.39 லட்சம். ஆனா என் மகனோட அன்பு இந்த உலகத்துல விலை மதிப்பு இல்லாதது. வயித்துல பிறக்காமலே மகிழ்ச்சியான தருணங்களை மருமக கீர்த்தி கொடுத்துக்கிட்டே இருக்கது எங்க மனசு குளிர்ந்துகிட்டே இருக்கு” என்று நெகிழ்ச்சியாக பேசினார் அசோக் செல்வன் அம்மா மலர் செல்வம். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved