MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • AC.சண்முகத்திற்கு என்ன ஆச்சு? சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை! உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை

AC.சண்முகத்திற்கு என்ன ஆச்சு? சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை! உடல்நிலை குறித்து வெளியான அறிக்கை

புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

1 Min read
vinoth kumar
Published : Jun 14 2024, 06:59 AM IST| Updated : Jun 14 2024, 07:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
AC Shanmugam

AC Shanmugam

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 3,52,990 வாக்குகளுடன் ஏ.சி.சண்முகம் இரண்டாம் இடம் பிடித்தார். 

23
AC Shanmugam Admitted in Hospital

AC Shanmugam Admitted in Hospital

இந்நிலையில், ஏ.சி.சண்முகத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

33
MGM Hospital

MGM Hospital

இதுகுறித்து எம்.ஜி.எம். மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: புதிய நீதிக் கட்சியின் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலும், மருத்துவர்களின் பரிந்துரையின் படியும் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக உள்ளார். மேலும், ஒரு மாதம் காலம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved