MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வைகைப்புயலின் அடுத்த பட அப்டேட்... திருமணமாகாத 50 வயது நடிகையுடன் ஜோடி சேரும் வடிவேலு...!

வைகைப்புயலின் அடுத்த பட அப்டேட்... திருமணமாகாத 50 வயது நடிகையுடன் ஜோடி சேரும் வடிவேலு...!

நகைச்சுவை நடிகர் வடிவேலு - பகத் பாசில் கூட்டணியில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் வைகைப்புயலுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 21 2024, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vadivelu

Vadivelu

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவர் சினிமாவில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர் தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸில் செம்ம பிசியாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், சுதாரித்துக் கொண்ட வடிவேலு, கதைக்கு முக்கியத்துவம் கொண்ட வேடங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகின்றார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Fahadh Faasil, Vadivelu

Fahadh Faasil, Vadivelu

அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில் சீரியஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மாமன்னன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ள வடிவேலு, தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படியுங்கள்... நாகர்கோயில் to பொள்ளாச்சி.. சோசியல் மெசேஜ் ஒன்னு இருக்கும்? - வடிவேலு & ஃபகத் இணையும் படத்தின் கதை இதுதானாம்!

34
Vadivelu Next Movie

Vadivelu Next Movie

அப்படத்தில் வடிவேலு உடன் மலையாள நடிகர் பகத் பாசிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சதீஷ் சங்கர் இயக்க உள்ளார். மலையாளத்தில் பிரபலமான இயக்குனரான இவர் தமிழில் இதுவரை ஆறுமனமே என்கிற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கி இருக்கிறார். நாகர் கோவிலில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிக்கும் போது பகத் பாசில் மற்றும் வடிவேலு சந்தித்துக் கொள்கின்றனர். அந்த பயணத்தின் போது நடக்கும் திரில்லிங்கான சம்பவத்தை நகைச்சுவை உடன் சொல்லும் விதமாக இதன் திரைக்கதை அமைந்துள்ளதாம்.

44
Sithara

Sithara

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படம் குறித்த மற்றுமொரு ஸ்பெஷல் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிகை சித்தாரா நடிக்க உள்ளாராம். இதன்மூலம் அவர் வடிவேலு உடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளாராம். 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ரியல் லைஃபிலும் ‘ராஜா ராணி’ ஆக வாழும் பகத் பாசில் - நஸ்ரியா ஜோடியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved