66 வயதில் மறைந்த பாலிவுட் இயக்குனர் சதீஷ் கௌஷிக்குக்கு 10 வயதில் மகள்! அவர் மனைவி யார் தெரியுமா?
பிரபல பாலிவுட் இயக்குனர் சதீஷ் கௌஷிக் திடீர் என உயிரிழந்தது, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரின் 10 வயது மகள் மற்றும் மனைவி பற்றிய தகவல்கள் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் நடிகரும் சதீஷ் கௌசிக், மாரடைப்பு காரணமாக இன்று காலை (வியாழக்கிழமை)காலமானார். டெல்லியில் தன்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஹோலி கொண்டாடிய பிறகு, இவருக்கு திடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டு, மயக்கமடைந்தார். உடல்நிலை சரி இல்லாத காரணத்தால், மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.
66 வயதாகும் சதீஷ் கௌஷிக்கிற்கு, ஷாஹி கௌஷிக் என்கிற மனைவியும், வன்ஷிகா கௌஷிக் என்கிற 10 வயது மகளும் உள்ளார். தந்தை மீது மிகுந்த அன்பு கொண்ட அவரின் மகளுக்கு இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என, குடும்பத்தினர் கூறி வருகிறாராம்.
மேலும் சதீஷ் கௌஷிக்கும் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களையும் உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அவரின் நண்பரும் மூத்த நடிகருமான அனுபம் கெர் சதீஷின் இழப்பிலிருந்து மீள்வது கடினமாக இருக்கும் என கூறியுள்ளார்.
சதீஷ் கௌசிக்கின் மனைவி:
சதீஷ் கௌஷிக்கின் மனைவி ஷாஷி கௌசிக், பாலிவுட் திரையுலகில் மிகவும் பொறுப்பான மனைவியாகவும், தன்னுடைய 10 வயது குழந்தைக்கு அன்பான அம்மாவாகவும் பார்க்கப்படுபவர். 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஷாஷி - சதீஷ் தம்பதி, 37 வருடங்களாக மிகவும் அன்யோநியமான தம்பதிகளாக உள்ளனர். 'சோரியன் சோரோன் சே கம் நஹி ஹோதி' என்கிற திரைப்படத்தையும் ஷாஷி தயாரித்துள்ளார். எந்த ஒரு விருது விழாவாக இருந்தாலும், பிரபலங்களின் விசேஷம் என்றாலும் ஜோடியாக வருவதையே வழக்கமாக வைத்திருந்தனர்.
வன்ஷிகா:
சதீஷ் கௌசிக் மற்றும் ஷாஷியின் 10 வயது மகள் யார் தெரியுமா? சதீஷ் கௌஷிக்கின் இரண்டு வயது மகன் சானு கௌஷிக் 1996 இல் இறந்தார். திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சதீஷ் தனது மகள் வன்ஷிகாவை 2012 ஆண்டு 56 வயதில் பெற்றுக்கொண்டார். வன்ஷிகா வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட குழந்தையாவார்.
மகனை பறிகொடுத்த பின்னர், பல ஆண்டுகள் தங்களின் நிம்மதியை தொலைத்து விட்டு, வெளியே காட்டமுடியாது சோகத்தில் இருந்த இவர்களுக்கு சந்தோஷத்தை தர வந்த தேவதையாகவே, வன்ஷிகாவை பார்த்தனர். குறிப்பாக வன்ஷிகா சதீஷ் கௌஷிக் மீது அலாதி பிரியம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்! பிரபல நடிகர் கோரிக்கை!