16 வயதினிலே ஸ்ரீதேவி கெட்டப்பில்... ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி கவர்ச்சி விருந்து வைத்த ஜான்வி! ஹாட் போட்டோஸ்!
நடிகை ஜான்வி கபூர், ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி... கவர்ச்சி விருந்து வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது, லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான, ஜான்வி கபூர்... தன்னுடைய அம்மாவை போலவே, பாலிவுட் திரையுலகில், தொடர்ந்து கதைக்கும் - கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து, மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். சவாலான கதாபாத்திரங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இதுவரை ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஜான்வி கபூர், முதல் முறையாக தெலுங்கு திரைப்படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். ஜூனியர் NTR ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ள படத்தை கொரட்டல சிவா இயக்க உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு ஜான்வி கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகார பூர்வமாக வெளியானது.
எனவே கூடிய விரைவில் தமிழ் திரையுலகிலும் ஜான்வி கபூர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான செய்தியில் கூட, ஜான்வி கபூர் 100-வது முறை நானும் ரவுடி தான் படத்தை பார்த்து விட்டு, விஜய் சேதுபதிக்கு போன் செய்து, நான் உங்கள் தீவிர ரசிகை என கூறியகோடு, அவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது .
இந்த செய்தி வெளியான பின்னர் ஜான்வி விஜய் சேதுபதியுடன் ஜோடி போட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. திரையுலகில் வெற்றிப்படிகளை நோக்கி அடியெடுத்து வைத்து வரும் ஜான்வி, தற்போது தன்னுடைய அம்மா ஸ்ரீதேவை நினைவு படுத்தும் விதமாக புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே கெட்டப்பில், கழுத்தை ஒட்டிய மணி, கொண்டை மற்றும் தலையில் மல்லி பூ வைத்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக, ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி முந்தானையை வித்தியாசமாக முறுக்கி, இடுப்பில் சுற்றி கட்டிக்கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.